துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது.
6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை தொடர் மொத்தம் 2 குரூப்களாக பிரிக்கப்பட்டு நடத்தப்படுகின்றன.
இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் ஏ குரூப்பிலும், ஆஃப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேச அணிகள் பி குரூபில் இடம்பெற்றுள்ளன.
இன்று நடைபெறும் 2வது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 7.30 மணிக்கு போட்டிகள் தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன

ஆசிய கோப்பையை 6வது முறையாக வென்றது இலங்கை அணி
இறுதி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அசத்தல் வெற்றி
பாக். 120 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்து தடுமாற்றம்
10 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 68 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது
ஃபக்கர் ஷமான் கோல்டன் டக் - 22 ரன்களில் 2 விக்கெட்டை இழந்த பாகிஸ்தான்
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 5 ரன்களில் ஆட்டமிழப்பு
ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் பாகிஸ்தான் 9 ரன்கள் எடுத்தது.
இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 170 ரன்கள் குவித்து அசத்தலான கம்பேக்
இலங்கை வீரர் ராஜபக்சே 35 பந்துகளில் அரைசதம்
16 ஓவர் முடிவில் இலங்கை 121 ரன்களுக்கு 6 விக்கெட் இழப்பு
இலங்கை அணி 58 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து சரிவு
இலங்கை அணி 53 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து திணறல்
இலங்கை அணி 36 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாற்றம்
இலங்கை அணி 4 ஓவர் முடிவில் 28 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது
இலங்கை அணி 2 ரன்களில் 1 விக்கெட்டை இழந்து தடுமாற்றம்
இலங்கை 1, நிசாங்கா, 2, குசேல் மெண்டிஸ், 3, தனஞ்செய்யா, 4, குணதிலாகா, 5, ராஜபக்சா, 6, ஷனாகா, 7. ஹசரங்கா, 8, கருணரத்னே, 9, பிரேமோம், 10. தீக்சனா, 11, மதுசங்கா
பாகிஸ்தான் 1, பாபர் அசாம், 2, முகமது ரிஸ்வான், 3, ஃபக்கர் ஷமான், 4, இஃபதிகார் அகமது, 5, குஷ்தில் ஷா, 6ஆசிப் அலி, 7, முகமது நவாஸ், 8, ஷதாப் கான், 9, ஹாரிஸ் ரவுஃப், 10. நஷிம் ஷா, 11, முகமது ஹஸ்னாயின்.
டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சு தேர்வு
டாஸ் வென்று முதலில் பந்துவீசும் அணியே பெரும்பாலான போட்டியில் வெற்றி பெறுகிறது. இதனால் டாஸ் இன்றைய போட்டியில் பெரும் முக்கியத்துவம் பெரும்
ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளும் 3 முறை மோதி இருக்கிறார்கள். இதில் இலங்கை 2 முறையும், பாகிஸ்தான் ஒரு முறையும் வென்று இருக்கிறது.
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை இதுவரை 2 முறை தான் ஆசிய கோப்பையை வென்று இருக்கிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை இதுவரை 10 முறை இறுதிப் போட்டியில் விளையாடி 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறது.
ஆசிய கோப்பை தொடர் இறுதிப் போட்டி பாகிஸ்தானும், இலங்கையும் சற்று நேரத்தில் மோதுகின்றன
ஒரு வேலை ஆப்கானிஸ்தானிடம் பாகிஸ்தான் தோற்று இருந்தால், இன்று இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும்
இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது
ஹசரங்கா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்
இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 121 ரன்களில் சுருண்டது பாகிஸ்தான்
110 ரன்களுக்கு 8வது விக்கெட்டை இழந்த பாகிஸ்தான்
15 ஓவர் முடிவில் 91 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்த பாகிஸ்தான்
10 பந்துகள் இடைவெளியில் 3 விக்கெட்டை இழந்த பாகிஸ்தான்
பாகிஸ்தான் அணி பவர்பிளே முடிவுல் 49 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து விளையாட வருகிறது
பாகிஸ்தான் அணியின் ஷதாப் கான், நஷிம் ஷா ஆகியோருக்கு இன்று ஓய்வு
இலங்கை அணியிலிருந்து அசலங்கா, பெர்னான்டோ நீக்கம்
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சு
ஆஃப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது
ஆஃப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 212 ரன்களை குவித்தது
விராட் கோலி சதம்.. இந்திய அணி அசுரத்தனமான பேட்டிங்.. ஆஃப்கானுக்கு இமாலய இலக்கு!
ஆஃப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதம், 53 பந்துகளில் 100 ரன்களை விளாசினார்
கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, அஸ்வின், அக்ஷர் பட்டேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், தீபக் சஹார்
இந்திய ப்ளேயிங் 11ல் இருந்து ஹர்திக் பண்ட்யாவுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி
ரோகித் சர்மா திடீர் விலகல்.. இந்திய அணி பேட்டிங்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்திய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது
ஆஃப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் இருந்து ரோகித் சர்மா விலகல், கே.எல்.ராகுல் தலைமை வகிக்கிறார்
ஆசிய கோப்பை இறுதி போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் தகுதி
பாகிஸ்தான் த்ரில் வெற்றி.. இந்தியா தொடரை விட்டு வெளியேறியது
பாகிஸ்தான் வெற்றிக்கு 5 பந்துக்கு 5 ரன்கள் தேவை
கடைசி ஓவரில் 11 ரன்கள் பாகிஸ்தான் வெற்றிக்கு தேவை
பாகிஸ்தான் 118 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்து தடுமாற்றம்.
பாகிஸ்தான் வெற்றிக்கு 10 பந்துகளில் 20 ரன்கள் தேவை. கைவசம் 2 விக்கெட் உள்ளது
பாகிஸ்தான் 8 ஓவர் முடிவில் 43 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது
பாகிஸ்தானுக்கு 130 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்
அதிரடி வீரர் நஜிபுல்லா அவுட்.. 4வது விக்கெட்டை இழந்த ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் 91 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது
ஆப்கானுக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு
இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை
ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது இந்தியா ?
கடைசி ஓவரில் இலங்கை வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்படுகிறது
அசலங்கா டக் அவுட்டாக, 97 ரன்களுக்கு 2வது விக்கெட்டை இழந்த இல்ங்கை
97 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த இலங்கை , நிசாங்கா 52 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
இலங்கை வீரர் நிசாங்கா 33 பந்துகளில் அரைசதம்
இலங்கை அணி 7 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்தது
ஆர்ஸ்தீப் சிங் வீசிய 5வது ஓவரில் இலங்கை 18 ரன்கள் விளாசி அசத்தல்
இலங்கை அணி 4 ஓவர் முடிவில் 27 ரன்கள் சேர்த்தது
சிக்சர் விளாசி அசத்தினார் தமிழக வீரர் அஸ்வின்
இந்திய அணி 20 ஓவர் முடிவில் 173 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்தது
ரிஷப் பண்ட் 17 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
18 ஓவர் முடிவில் இந்திய அணி 157 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்தது
தீபக் ஹூடா டக் அவுட்டான நிலையில், அது நோ பால் என அறிவிக்கப்பட்டது
ஹர்திக் பாண்டியா 17 ரன்களில் ஆட்டமிழப்பு
இந்திய அணி 17 ஓவர் முடிவில் 140 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்துள்ளது
சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
41 பந்துகளில் 72 ரன்கள் விளாசிய நிலையில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார்
ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக சிக்சர் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார் ரோகித் சர்மா
இந்திய அணி 10 ஓவர் முடிவில் 79 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்தது
விராட் கோலி டக் அவுட்.. 13 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்தது ’இந்தியா’ = இலங்கை
விராட் கோலி டக் அவுட்.. 13 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்தது இலங்கை
கேஎல் ராகுல் 6 ரன்களுக்கு ஆட்டமிழப்பு -இந்திய அணி 11 ரன்களுக்கு 1 விக்கெட் இழப்பு
இந்திய அணியில் ரவி பிஸ்னாய்க்கு பதில் தமிழக வீரர் அஸ்வின் சேர்ப்பு
இலங்கை அணியில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை
டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா இலங்கை இன்னும் சற்று நேரத்தில் மோத உள்ளது
19.5வது ஓவரில் பாகிஸ்தான் அணி வெற்றி இலக்கை எட்டியது
பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி
19வது ஓவரில் 19 ரன்களை விட்டு கொடுத்தார் புவனேஸ்வர் குமார்
கடைசி ஓவரில் பாக் அணியின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவை
பாகிஸ்தான் வெற்றிக்கு 16 பந்துகளில் 31 ரன்கள் தேவை
பாகிஸ்தான் வீரர் ரிஸ்வான் 37 பந்துகளில் அரைசதம்
பாகிஸ்தான் அணி வெற்றிக்கு 50 பந்துகளில் 87 ரன்கள் தேவை
பாகிஸ்தான் அணி 2 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள்
பாகிஸ்தானுக்கு 182 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி
இந்திய அணி 20 ஓவர் முடிவில் 181 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்தது
தீபக் ஹூடா 16 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதம் விளாசிய வீரர் என்ற சாதனை படைத்தார் விராட் கோலி
பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி அரைசதம் விளாசி அசத்தல்
இந்திய அணி 17.3 ஓவரில் 157 ரன்களுக்கு 5 விக்கெட் இழப்பு
இந்தியா, பாக் ஆட்ட இடைவேலையின் போது பீஸ்ட் பட பாடல் போடப்பட்டது
டக் அவுட்டான ஹர்திக் பாண்டியா- 131 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்தது இந்தியா
தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக களமிறங்கிய ரிஷப் பண்ட் 12 பந்தில் 14 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
இந்திய அணி 10.4 வது ஓவரில் 100 ரன்களை கடந்தது
சூர்யகுமார் யாதவ் 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 92 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது
கேஎல் ராகுல் 28 ரன்களுக்கு ஆட்டமிழப்பு. 2வது விக்கெட்டை இழந்த இந்தியா
கேப்டன் ரோகித் சர்மா 16 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழப்பு
4.2 வது ஓவரில் இந்திய அணி 50 ரன்களை எட்டியது.
இந்திய அணி 2 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் எடுத்துள்ளது
பாகிஸ்தான் அணி 1,பாபர் அசாம், 2, முகமது ரிஸ்வான், 3, ஃபக்கர் சமான், 4, ஆசிஃப் அலி, 5,இஃப்திகார் அகமது, 6, குஸ்தில் ஷா, 7, ஷதாப் கான், 8, முகமது ஹஸ்னாயின், 9, முகமது நவாஸ், 10,ஹரிஸ் ராஃப், 11, நஷிம் ஷா
இந்திய அணி, 1, ரோகித் சர்மா, 2, கேஎல் ராகுல், 3, விராட் கோலி, 4, சூர்யகுமார் யாதவ், 5, ஹர்திக் பாண்டியா, 6,ரிஷப் பண்ட், 7. தீபக் ஹூடா, 8, புவனேஸ்வர் குமார், 9, ஆர்ஸ்தீப் சிங், 10, ரவி பிஸ்னாய், 11, சாஹல்
இந்திய அணியிலிருந்து தினேஷ் கார்த்திக் அதிரடி நீக்கம்
தீபக் ஹூடா, ரவி பிஸ்னாய், ஹர்திக் பாண்டியா ஆகியோர் இந்திய அணியில் சேர்ப்பு
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு
மைதானத்திற்குள் கோலி பயிற்சி செய்ய வந்ததும் ரசிகர்கள் உற்சாகம்
இந்திய அணியில் இன்றைய ஆட்டத்தில் ஆவேஷ் கான் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது
லீக் சுற்றில் இந்திய அணி ஏற்கனவே பாகிஸ்தானை வீழ்த்திய நிலையில், தற்போது பதிலடி தரும் உத்வேகத்துடன் பாபர் அசாம் தலைமையிலான வீரர்கள் களமிறங்கி உள்ளனர்
பிளே ஆஃப் சுற்றில் இந்தியா,பாகிஸ்தான் அணிகள் இன்னும் சற்று நேரத்தில் மோதுகிறது
19.1 வது ஓவரில் 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது இலங்கை
இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
கடைசி ஓவரில் இலங்கை வெற்றிக்கு 1 ரன் தேவை
இலங்கை வெற்றிக்கு 12 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே தேவை
இலங்கை அணியின் வெற்றிக்கு 15 பந்துகளில் 14 ரன்கள் தேவை
இலங்கை வெற்றிக்கு 51 பந்தில் 82 ரன்கள் தேவை
இலங்கை அணி 9 ஓவர் முடிவில் 80 ரன்களுக்கு 2 விக்கெட் இழப்பு
இலங்கைக்கு 176 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 175 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்தது
ஆப்கானிஸ்தான் 17 ஓவர் முடிவில் 150 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து தடுமாற்றம்
ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஷ் 45 பந்துகளில் 84 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்
15 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்துள்ளது ஆப்கானிஸ்தான்
22 பந்தில் அரைசதம் விளாசினார் ஆப்கான் வீரர் குர்பாஷ்
ஆப்கானிஸ்தான் அணி 12 ஓவர் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்துள்ளது
ஆப்கானிஸ்தான் முதல் ஓவரில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்தது
வங்கதேசத்துக்கு எதிராக களமிறங்கிய அதே அணியே இன்றைய ஆட்டத்தில் விளையாடுகிறது என இலங்கை கேப்டன் ஷனாகா அறிவிப்பு
டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு
ஷார்ஜாவில் 4 சர்வதேச டி20 போட்டியில் விளையாடிய ஆப்கான் வீரர் முஜிபுர் ரஹ்மான் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
லீக் சுற்றில் ஆப்கானிஸ்தானிடம் 105 ரன்களில் இலங்கை சுருண்டது
ஆப்கானிஸ்தானை பழித்தீர்க்கும் முனைப்பில் இலங்கை தற்போது களமிறங்குகிறது
வரும் ஞாயிற்றுகிழமை இந்தியா, பாகிஸ்தான் மோதுகிறது
155 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி
பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான் 4 விக்கெட் வீழ்த்தினார்
ஹாங்காங் அணி 38 ரன்களுக்கு சுருண்டது
ஹாங்காங் அணி 36 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து திணறல்
கடைசி ஓவரில் பாகிஸ்தான் வீரர் குஷ்தில் ஷா 4 சிக்சர்களை விளாசினார்
அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 57 பந்துகளில் 78 ரன்கள் சேர்த்தார்
ஹாங்காங் அணிக்கு 194 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்
பாகிஸ்தான் அணி 13 ஓவர் முடிவில் 93 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது
பாகிஸ்தான் அணி 52 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்த நிதானமாக விளையாடுகிறது
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 9 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
பாகிஸ்தான் 2 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் எடுத்துள்ளது
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சு தேர்வு
பி பிரிவிலிருந்து சூப்பர் 4 சுற்றுக்கு ஆப்கானிஸ்தான், இலங்கை தகுதி
சூப்பர் 4 சுற்றுக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது
வங்கதேசத்தை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி
இலங்கை அணியின் வெற்றிக்கு 5 பந்துகளில் 7 ரன்கள் தேவை
இலங்கை அணியின் வெற்றிக்கு 7 பந்துகளில் 13 ரன்கள் தேவை. கைவசம் 2 விக்கெட்டுகள் உள்ளன
20 ஓவர் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்தது
டி20 கிரிக்கெட்டில் 6 ஆயிரம் ரன்கள் மற்றும் 400 விக்கெட்டுகள் வீழ்த்திய 2வது வீரர் என்ற பெருமையை பெற்றார் ஷகிபுல் ஹசன்
வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு
பாகிஸ்தான், ஹாங்காங்கை வீழ்த்தியதன் மூலம் சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா தகுதி
ஹாங்காங் அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி
ஹாங்காங் அணி வெற்றிக்கு 46 பந்துகளில் 110 ரன்கள் தேவை. கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளன
ஹாங்காங் அணி 3 ஓவர் முடிவில் 19 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்தது
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 31வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்
கடைசி ஓவரில் இந்திய அணி 26 ரன்களை குவித்தது
ஹாங்காங்க்கு எதிராக இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது.
22 பந்துகளில் அரைசதம் விளாசினார் சூர்யகுமார் யாதவ்
இந்திய வீரர் விராட் கோலி 31வது அரைசதத்தை பூர்த்தி செய்தார்
கேஎல் ராகுல் 39 பந்துகள் எதிர்கொண்டு 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழப்பு
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 21 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
சர்வதேச டி20 போட்டியில் 3500 ரன்களை கடந்தார் ரோகித் சர்மா
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு, ரிஷப் பண்ட் சேர்ப்பு
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி பந்துவீச்சு தேர்வு
வங்கதேசத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்
சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தானுக்கு 128 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது வங்கதேசம்
வங்கதேச அணி 13 ஓவர் முடிவில் 72 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்தது
வங்கதேச அணி 9 ஓவர் முடிவில் 42 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தவிப்பு
ஆப்கானிஸ்தான் லெவன்: ஆப்கானிஸ்தான் - 1, ஹஸ்ரத்துல்லா ஷசாய், 2, குர்பாஷ், 3, இப்ராஹிம் சாட்ரான், 4, கரிம் ஜன்னட், 5, நஜிபுல் சர்தான், 6, முகமது நபி, 7, ஓமர்சாய், 8, ரஷித் கான், 9, நவீன் உல் ஹக், 10, முஜிபுர் ரஹ்மான், 11, ஃபசல் ஃபரூக்கி
வங்கதேசம் லெவன் ; 1,முகமது நயிம், 2,அனாமுல் ஹக், 3,ஷகிபுல் ஹசன், 4, அஃபிப் ஹுசைன், 5, முஸ்பிகுர் ரஹிம், 6, முகமுதுல்லா, 7, மொஸ்தேக் ஹூசைன்,, 8.மெஹதி ஹசன். 9,முகமுதுல்லா சபியுதின், 10,டஸ்கின் அகமது, 11,முஸ்தபிசுர் ரஹ்மான்
ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு
5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி - ஹர்திக் அபார ஆட்டம்
ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம்
கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 7 ரன்கள் தேவை
இந்தியாவின் வெற்றிக்கு 12 பந்துகளில் 21 ரன்கள் தேவை
பாகிஸ்தான் ஓவர் ரேட் குறைவாக இருப்பதால், ஐசிசி புதிய விதிப்படி வெளி வட்டத்தில் ஒரு ஃபில்டர் குறைப்பு
விராட் கோலி 35 ரன்களுக்கு ஆட்டமிழப்பு - 53 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்த இந்தியா
கேப்டன் ரோகித் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழப்பு
இந்திய அணி 7.4 ஓவரில் 50 ரன்களை கடந்தது. கோலி, ரோகித் களத்தில் உள்ளனர்
இந்திய அணி வெற்றிக்கு 86 பந்துகளில் 110 ரன்கள் தேவை
இந்திய வீரர் கேஎல் ராகுல் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றம்
இந்தியாவுக்கு 148 ரன்களை இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்
பாகிஸ்தான் 147 ரன்களுக்கு ஆட்டமிழப்பு
அடுத்த பந்திலேயே பாக் அணியின் 9வது விக்கெட்டை வீழ்த்திய புவனேஸ்வர் குமாருக்கு ஹாட்ரிக் வாய்ப்பு
பாகிஸ்தான் 128 ரன்களுக்கு 8 விக்கெட் இழந்து தடுமாற்றம்
பாகிஸ்தான் அணி 16 ஓவர் முடிவில் 111 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது
5வது விக்கெட்டை இழந்த பாகிஸ்தான். தனது 3வது விக்கெட்டை வீழ்த்தினார் ஹர்திக் பாண்டியா
பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வான் 43 ரன்களுக்கு ஆட்டமிழப்பு. 96 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்தது பாகிஸ்தான்
பாகிஸ்தான் வீரர் இஃப்திகார் 28 ரன்களில் ஹர்திக் பந்துவீச்சில் ஆட்டமிழப்பு. 3வது விக்கெட்டை இழந்தது பாகிஸ்தான்
12 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 87 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்தது. இஃதிகாரின் கேட்ச் வாய்ப்பை தவறவிட்டார் சாஹல்
பாகிஸ்தான் அணி 10 ஓவர் முடிவில் 68 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து விளையாடி வருகிறது.
8 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 59 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து நிதான ஆட்டம்
ஃபகர் ஷமான் 10 ரன்களில் ஆட்டமிழப்பு - 42 ரன்களுக்கு 2வது விக்கெட்டை இழந்த பாகிஸ்தான்
பாகிஸ்தான் 5 ஓவர் முடிவில் 30 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்து நிதான ஆட்டம்
கேப்டன் பாபர் அசாம் அவுட்- 15 ரன்களில் முதல் விக்கெட்டை இழந்த பாகிஸ்தான்
கொரோனாவிலிருந்து குணமடைந்த பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பாகிஸ்தான் போட்டிக்காக இந்திய அணிக்கு திரும்பினார்
முதல் ஓவரிலேயே ஒரு ரிவியூவை வீணடித்த இந்தியா
இந்திய ப்ளேயிங் 11: ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், யுவேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்
இந்திய அணியில் ரிஷப் பண்ட் அதிரடி நீக்கம் - தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது
இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் தினேஷ் கார்த்திக் அல்லது ரிஷப் பண்ட் யாரோ ஒருவர் நீக்கப்படவுள்ளதால் ரசிகர்கள் குழப்பம்
போட்டி நடைபெறும் துபாயில் இன்று பகலில் 39 டிகிரி செல்ஸியஸும், இரவில் 30 டிகிரி செல்ஸியஸும் இருக்கும் என அறிவிப்பு
இந்தியா - பாகிஸ்தான் போட்டியை ஒன்றாக அமர்ந்து பார்க்கக்கூடாது என ஸ்ரீநகர் என்.ஐ.டி மாணவர்களுக்கு நிர்வாகம் உத்தரவு;
போட்டி குறித்து எந்தவித பதிவுகளையும் சமூக வலைதளங்களில் போடக்கூடாது என அறிவுறுத்தல்
இந்திய அணிக்கு நற்செய்தி, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கொரோனாவில் இருந்து குணமடைந்தார்
கொரோனாவில் இருந்து மீண்ட ராகுல் டிராவிட், உடனடியாக அமீரகத்திற்கு செல்வதற்கான பணிகளை பிசிசிஐ செய்து வருகிறது
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று இரவு 7 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் தொடங்குகிறது
10.1வது ஓவரில் வெற்றி இலக்கை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து ஆப்கானிஸ்தான் எட்டியது
இலங்கையை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி
இலங்கை அணி 105 ரன்களுக்கு ஆட்டமிழப்பு. ஆப்கான் வீரர் ஃபருகி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்
அடுத்த 4 ஆண்டுகளுக்கான ஐசிசி தொடர்களை ஒளிபரப்பும் உரிமையை வென்றது ஸ்டார் நிறுவனம்
தொடக்க வீரர் நிசாங்காவும் அவுட்.. இலங்கை 5 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம்
இலங்கை வீரர் அசலங்கா டக் அவுட், 3 ரன்களுக்கு 2வது விக்கெட்டை இழந்தது இலங்கை அணி
இலங்கை வீரர் குசேல் மெண்டிஸ் 2 ரன்களில் ஆட்டமிழப்பு.. இலங்கை 3 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்தது
100வது சர்வதேச டி20 போட்டியில் களமிறங்கும் ஆப்கானிஸ்தான்
இலங்கை அணி நடப்பாண்டில் விளையாடிய 11 டி20 போட்டியில் 2 போட்டியில் மட்டுமே வென்று இருக்கிறது.
இலங்கை - 1, குணதிலகா, 2, நிசாங்கா, 3, அசலங்கா, 4, பனுகா ராஜபக்சா, 5, குசேல் மெண்டிஸ், 6, ஷனாகா, 7, ஹசரங்கா, 8, கருணரத்னே, 9, பதிரனா, 10,, மகிஷ் தீக்சணா, 11, தில்சான் மதுசனகா
ஆப்கான் பிளேயிங் லெவன் - 1, ஹஸ்ரத்துல்லா ஷசாய், 2, குர்பாஷ், 3, இப்ராஹிம் சாட்ரான், 4, கரிம் ஜன்னட், 5, நஜிபுல் சர்தான், 6, முகமது நபி, 7, ஓமர்சாய், 8, ரஷித் கான், 9, நவீன் உல் ஹக், 10, முஜிபுர் ரஹ்மான், 11, ஃபசல் ஃபரூக்கி
ஆசிய கோப்பை கிரிக்கெட் - இலங்கைக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு தேர்வு
இதுவரை இலங்கை , ஆப்கான் அணி ஒரு முறை மோதி உள்ளது. இதில் இலங்கை அணி வெற்றி பெற்று இருக்கிறது.
ஆப்கானிஸ்தான் XI 1, ஹஸ்ரத்துல்லா ஷசாய், 2, குர்பாஷ், 3, இப்ராஹிம் சாட்ரான், 4, நஜிபுல் சர்தான், 5, ஷின்வாரி, 6, முகமது நபி, 7, ஓமர்சாய், 8, ரஷித் கான், 9, நவீன் உல் ஹக், 10, முஜிபுர் ரஹ்மான், 11, ஃபரித் அகமது மாலிக்
இலங்கை XI 1, குணதிலகா, 2, நிசாங்கா, 3, அசலங்கா, 4, பனுகா ராஜபக்சா, 5, குசேல் மெண்டிஸ், 6, ஷனாகா, 7, ஹசரங்கா, 8, கருணரத்னே, 9, பதிரனா, 10,, மகிஷ் தீக்சணா, 11, ஜெயவிக்ரம்மா
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி விளையாடுவது, இதுவே 2வது முறையாகும், கடந்த 2014ம் ஆண்டு முதல் முறையாக விளையாடியது
முதலில் இலங்கையில் நடைபெறுவதாக இருந்த ஆசிய கோப்பை போட்டிகள், பின்னர் அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளன
இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி நாளை இரவு 7 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது