For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அடேங்கப்பா”.. இந்தியா - பாக், போட்டி.. மாணவர்களுக்கு அதிரடி சுற்றறிக்கை.. என்.ஐ.டி பலே ஐடியா!

துபாய்: இந்தியா - பாகிஸ்தான் போட்டியையொட்டி என்.ஐ.டி மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சுற்றறிக்கை ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

Recommended Video

Asia Cup 2022: BCCI Book செய்த Palm Jumeirah Resort! | Aanee's Appeal | *Cricket

6 நாடுகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்று முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது.

இதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று இரவு 7 மணிக்கு துபாய் சர்வதேச மைதானத்தில் தொடங்கியது.

ஆசிய கோப்பை போட்டி

ஆசிய கோப்பை போட்டி

கடைசியாக இரு அணிகளும் மோதிய டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது. எனவே பதிலடி கொடுக்க வேண்டும் என இந்திய ரசிகர்களும், மீண்டும் இந்தியாவை வீழ்த்த வேண்டும் என பாகிஸ்தான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துள்ளனர். இதனால் சமூக வலைதளங்களும் பரபரப்படைந்துள்ளது.

அறிவுரை என்ன

அறிவுரை என்ன

இந்நிலையில் இந்த போட்டி குறித்து ஸ்ரீநகர் என்.ஐ.டி கல்லூரி மாணவர்களுக்கு அட்வைஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது மாணவர்கள் யாரும் ஒன்றாக அமர்ந்து இந்தியா - பாகிஸ்தான் போட்டியை பார்க்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களை பல பிரிவுகளாக பிரித்து தனி தனி அறைகளில் போட்டியை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

என்ன தண்டனை

என்ன தண்டனை

போட்டி முடிந்த பிறகு எந்த அணி வெற்றி பெற்றாலும், அது குறித்து எந்தவொரு பதிவையும் சமூக வலைதளங்களில் மாணவர்கள் பதிவிடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி மாணவர்கள் ஏதேனும் சர்ச்சையை ஏற்படுத்தினால் குறைந்தபட்சம் ரூ.5,000 அபராதத்துடன் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள் விளக்கம்

அதிகாரிகள் விளக்கம்

இதுகுறித்து பேசியுள்ள என்.ஐ.டி அதிகாரிகள், இந்தியா - பாகிஸ்தான் அணிகளின் போட்டியை மாணவர்கள் விளையாட்டாக மட்டுமே பார்க்க வேண்டும். அதனை தாண்டி அவர்களின் சிந்தனை வேறு வகையில் சென்றுவிடக்கூடாது. அது தேசத்திற்கு நல்லதல்ல என்ற காரணத்திற்காகதான் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறியுள்ளனர்.

Story first published: Sunday, August 28, 2022, 12:44 [IST]
Other articles published on Aug 28, 2022
English summary
NIT instruction over India vs pakistan clash ( இந்தியா - பாகிஸ்தான் போட்டி குறித்து என்.ஐ.டி நிர்வாகம் நடவடிக்கை ) இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்காக என்.ஐ.டி மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+