
விராட் கோலியின் ஃபார்ம்
இப்போட்டியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி ஓரளவிற்கு தனது ஃபார்முக்கு திரும்பினார். 34 பந்துகளில் 35 ரன்களை அடித்த அவர், அதிரடிக்கு மாறும் நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். மன அழுத்தம் காரணமாக தவிப்பதாக கூறியிருந்த கோலி, அதில் இருந்து ஓரளவிற்கு வெளியில் வந்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் பேடி அப்டன் தான்.

ஸ்பெஷல் கோச்
தென்னாப்பிரிக்காவை சேர்ந்த மனநிலை பயிற்சியாளரான பேடி அப்டன் சமீபத்தில் பிசிசிஐ-ஆல் மீண்டும் இந்திய அணிக்குள் சேர்க்கப்பட்டார். தொடர்ச்சியான போட்டிகள் இருப்பதால் வீரர்களை மனரீதியாக பலப்படுத்த அவர் தேவைப்பட்டார். ஆனால் தற்போது விராட் கோலிக்கான ஸ்பெஷல் பயிற்சியாளரை போன்றே அவர் மாறியுள்ளார். கோலியை எப்படியாவது சரிசெய்ய வேண்டும் என அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் நடந்த மாற்றங்களும் தெரியவந்துள்ளது.

என்னென்ன சிகிச்சைகள்
விராட் கோலிக்காக பேடி அப்டன் 5 செஷன்களுக்கு ஏற்பாடு செய்துள்ளார். 45 நிமிடங்கள் கொண்ட ஒவ்வொரு செஷனின் போதும், விராட் கோலி எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என எந்தவித அறிவுரையும் கூறவில்லை. கடந்த ஆண்டுகளில் விராட் கோலி சிறப்பாக விளையாடிய வீடியோக்களை காண்பித்து, கோலிக்கு கிரிக்கெட் விளையாடும் ஆசை அதிகரித்து வருவதாக தெரிகிறது. இதற்கு காரணம் கோலி, தனது வாழ்கையில் முதல் முறையாக ஒரு மாத காலமாக பேட்-ஐ தொடாமல் இருந்ததாக கூறியது தான். எனவே விராட் கோலிக்கு இனி புதிய இலக்கு மற்றும் கிரிக்கெட் மீதான காதலை அதிகரித்து வருகின்றனர்.

பேடி அப்டன் யார்
இந்திய அணியில் மிக முக்கிய பங்காற்றியவர் பேடி அப்டன் ஆகும். கடந்த 2011ம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியில் சச்சின், தோனி, யுவ்ராஜ் சிங் உள்ளிட்ட வீரர்களின் மனநிலையை சரியாக வைத்துக்கொண்டவர் இவர் தான். இவர் விராட் கோலியின் மனநிலையையும் சரி செய்து சிறப்பாக விளையாட வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











