Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பேட்டால் அடிக்க வந்த பாக். வீரர்.. களத்தில் நிகழ்ந்த மோதல்.. பரபர சம்பவம்.. தடை விதிக்குமா ஐசிசி

ஷார்ஜா: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் ஃபரித் அகமதை பாகிஸ்தான் வீரர் ஆசிஃப் அலி பேட்டால் தாக்க வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Recommended Video

AFG vs PAK போட்டியில் உச்சக்கட்ட பரப்பரப்பு வீரர்கள் இடையே மோதல் Cricket

நேற்று ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வாழ்வா சாவா என்ற கட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தானை எதிர்கொண்டது.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில், முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 129 ரன்கள் எடுத்தது.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. அப்போது 87 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் இருந்த பாகிஸ்தான் அடுத்தடுத்து 6 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து கடைசி ஓவரில் கைவசம் ஒரு விக்கெட் இருந்த நிலையில், வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது பாகிஸ்தான் வீரர் நஷிம் ஷா தொடர்ந்து 2 சிக்சர்களை விளாசினார்.

திருப்புமுனை

திருப்புமுனை

இந்த ஓவருக்கு முன் கால்பந்து போட்டியில் நடைபெறும் சண்டைகளை மிஞ்சும் அளவுக்கு ஒரு சம்பவம் நிகழ்ந்தது. பாகிஸ்தான் வீரர் ஆசிஃப் அலி, தனி ஆளாக நின்று வெற்றிக்காக போராடி கொண்டு இருந்தார். அப்போது ஃபரித் வீசிய ஓவரில் தூக்கி அடிக்கிறேன் என்று ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் வீரர் ஃபரித் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து கத்தினார்.

கடுப்பான பாக். வீரர்

கடுப்பான பாக். வீரர்

இதனால் கடுப்பான ஆசிஃப் அலி, தன்னுடைய பேட்டை எடுத்து, ஃபரித்தை அடிக்க முயன்றார். ஆனால் கொஞ்சமும் பயப்படாத ஃபரித், வா சண்டைக்கு என்று அழைப்பது போல் களத்தில் நின்றார். இதனையடுத்து நிலைமை மோசமானதை அறிந்த மற்ற ஆப்கானிஸ்தான் வீரர்கள் ஆசிஃப் அலியை தடுக்கும் பெயரில் தள்ளிவிட்டனர்.

களத்தில் மோதல்

களத்தில் மோதல்

இதனால் ஆசிஃப் அலி அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து, நடுவர்கள் விரைந்து வந்த ஆசிஃப் அலியை ஆப்கானிஸ்தான் வீரர்களையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போட்டி முடிந்ததும் ஆசிஃப் அலி மைதானத்துக்குள் ஓடி வந்து அநாகரிகமான முறையில் நடந்து கொண்டார். ஆப்கான் ரசிகர்கள் ஆசிஃப் அலி மீதும், பாகிஸ்தான் ரசிகர்கள் ஃபரித் அகமது மீதும் பரஸ்பர குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றன. இந்த நிலையில் ஆசிஃப் அலி மீது ஐசிசி நடவடிக்கை எடுத்து வருகிறது.

Story first published: Thursday, September 8, 2022, 13:27 [IST]
Other articles published on Sep 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+