ஆசிய கோப்பை த்ரில்லர்..கடைசி ஓவரில் 2 சிக்சர்..1 விக்கெட் வித்தியாசத்தில் பாக்.வெற்றி..இந்தியா அவுட்
ஷார்ஜா: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
வாழ்வா சாவா கட்டத்தில் உள்ள ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானை எதிர்கொண்டது. . இதில் ஒரு வேலை பாகிஸ்தான் தோல்வியை தழுவினால், இந்தியா தொடரை விட்டு சென்றுவிடும். இதனால் இந்திய ரசிகர்களுக்கு இன்று ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவு அளித்தனர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில்,. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீசுவதாக அறிவித்தது.

நல்ல தொடக்கம்
தொடக்க வீரர்கள் ஹசரத்துல்லா மற்றும் ரஹமனுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். இருப்பினும் 3.5 வது ஓவரில் ஆப்கானிஸ்தான் 36 ரன்கள் எடுத்த நிலையில், முதல் விக்கெட்டை இழந்தது. குர்பாஷ் 17 ரன்களில் ஆட்டமிழக்க, ஹசரத்துலா 21 ரன்களில் வெளியேறினார். ஆப்கானிஸ்தான் 91 ரன்களுக்கு 3 விக்கெட் என்ற நிலையில் இருந்த போது அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழக்க, அந்த அணி சரிவை நோக்கி சென்றது.

தடுமாறிய ஆப்கான்
நஜிபுல்லா 10 ரன்களிலும், கரிம் 13 ரன்களிலும் வெளியேற கேப்டன் முகமது நபி டக் அவுட் ஆனார். இறுதியில் உமர்சாய் 10 ரன்களும், ரஷித் கான் 18 ரன்களும் எடுக்க, ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் வீரர் ஹரிஸ் ராஃப் 2 விக்கெட்டுகள் வீழ்த்த, மற்ற அனைவரும் 1 விக்கெட்டுகள் எடுத்தனர்.

சரிந்த பாகிஸ்தான்
இதனையடுத்து 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. பாபர் அசாம் டக் அவுட்டாக, ஃபக்கர் சமான் 5 ரன்களில் வெளியேறினார். ரிஸ்வான் 20 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் அணி 87 ரன்களக்கு 3 விக்கெட் எடுத்திருந்த நிலையில், திடீரென்று விக்கெட்டுகள் மளமளவென சரிந்தது. மேலும் 31 ரன்கள் சேர்ப்பதற்குடள 6 விக்கெட்டுகளை பாகிஸ்தான் அணி இழந்தது.

கடைசி ஓவரில் த்ரில்லர்
இதனால் கடைசி ஓவரில் வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. இதனால் பாகிஸ்தான் வெற்றி அவ்வளவு தான் எதிர்பார்த்த நிலையில், யாருமே எதிர்பாராத வகையில் ஃபருக்கி வீசிய கடைசி ஓவரின் முதல் 2 பந்துகளில் நசிம் ஷா 2 இமாலய சிக்சரை விளாசினார். இதன் மூலம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வென்ற பாக் வீரர்கள் துள்ளி குதித்து வெற்றியை கொண்டாடினர். இதன் மூலம் இறுதிப் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் மோதுகிறது.


Click it and Unblock the Notifications