Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தானுக்கு அடிச்சது பம்பர் பரிசு..இலங்கைக்கு ஆரம்பமே சறுக்கல்.. அணிக்கு திரும்பிய நட்சத்திரங்கள்

துபாய் : ஆசிய கோப்பை தொடர் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானும், இலங்கையும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஆசிய கோப்பையை 6வது முறையாக வெல்லும் முனைப்புடன் இலங்கை அணியும்,3வது முறையாக வெல்லும் உத்வேகத்துடன் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.

இரு அணிகளும், பிளே ஆப் சுற்றில் மோதிய போது பாகிஸ்தான் அணி தோல்வியை தழுவியது. இதனால் இறுதிப் போட்டியில் பழித் தீர்க்கும் முனைப்புடன் களமிறங்குகிறது.

டாஸ்

டாஸ்

ஆசிய கிரிக்கெட் இறுதிப் போட்டி வரலாற்றில் இவ்விரு அணிகளும் 3 முறை மோதி இருக்கிறார்கள். இதில் இலங்கை 2 முறையும், பாகிஸ்தான் ஒரு முறையும் வென்று இருக்கிறது. டாஸ் வென்று முதலில் பந்தவீசும் அணியே வெற்றி பெறுகிறது. இந்த நிலையில், டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தது.

பாக் அணியில் மாற்றம்

பாக் அணியில் மாற்றம்

இது குறித்து பேசிய பாபர் அசாம், எங்கள் அணி வீரர்களிடையே உத்வேகம் சிறப்பாக உள்ளது. இந்த தொடரில் நன்றாக விளையாடினோம். ஒவ்வொரு போட்டியிலும், எங்கள் அணியில் ஒரு ஆட்டநாயகன் உருவாகி வருவகிறார்கள். எங்கள் அணியில் நஷிம் ஷா மற்றும் ஷதாப் கான் ஆகியோர் அணிக்கு திரும்ப உள்ளனர்.

இலங்கை பேட்டிங்

இலங்கை பேட்டிங்

இதனைத் தொடர்ந்து பேசிய இலங்கை அணி கேப்டன் ஷனாகா, நாங்களும் டாஸ் வென்று இருந்தால் பந்துவீச்சை தான் தேர்வு செய்து இருப்போம். ஆனால் இது இறுதிப் போட்டி என்பதால், பேட்டிங் முதலில் செய்வதும் மகிழ்ச்சி தான். மதுசங்கா, மகிஷ் தீக்சனா ஆகியோர் சிறப்பாக பந்துவீசுகிறார்கள். இது உலக கோப்பையில் எங்களுக்கு நல்ல விசயமாக பார்க்கிறேன் என்று கூறினார்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

பாகிஸ்தான் 1, பாபர் அசாம், 2, முகமது ரிஸ்வான், 3, ஃபக்கர் ஷமான், 4, இஃபதிகார் அகமது, 5, குஷ்தில் ஷா, 6ஆசிப் அலி, 7, முகமது நவாஸ், 8, ஷதாப் கான், 9, ஹாரிஸ் ரவுஃப், 10. நஷிம் ஷா, 11, முகமது ஹஸ்னாயின்.

இலங்கை 1, நிசாங்கா, 2, குசேல் மெண்டிஸ், 3, தனஞ்செய்யா, 4, குணதிலாகா, 5, ராஜபக்சா, 6, ஷனாகா, 7. ஹசரங்கா, 8, கருணரத்னே, 9, பிரேமோம், 10. தீக்சனா, 11, மதுசங்கா

Story first published: Sunday, September 11, 2022, 19:20 [IST]
Other articles published on Sep 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+