For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

22 பந்தில் அரைசதம்.. இலங்கையை அலறவிட்ட ஆப்கானிஸ்தான் வீரர்.. இமாலய இலக்கை எட்டுமா ஸ்ரீலங்கா ?

ஷார்ஜா: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு எதிரான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் ரன் குவிப்பில் ஈடுபட்டது.

Recommended Video

Asia Cup 2022: Sri Lankan Team-ஐ புகழ்ந்த Shakib Al Hasan! | SL vs BAN

டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஷனாகா பந்துவீச்சை தேர்வு செய்வதாக கூறினார். ஆனால் அப்போது பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி, நாங்கள் பேட்டிங் செய்ய தான் இருந்தோம்.

முதலில் பேட் செய்து, அதிக ரன்கள் குவித்து இலங்கைக்கு கடும் நெருக்கடி தருவோம் என்று கூறி இருந்தார். முதலில் இது வெறும் வாய் சவடால் என்று ரசிகர்கள் நினைத்தனர்.

பட்டையை கிளப்பினார்

பட்டையை கிளப்பினார்

ஆனால், அதன் பிறகு தான் தெரிந்தது. உண்மையிலேயே அதிரடி ஆட்டத்தை ஆப்கானிஸ்தான் ஆடியது என்று.. தொடக்க வீரர் ஹசரத்துல் ஷாசாய் மெதுவாக விளையாடி ரன்களை சேர்க்க, மறு புறத்தில் ரஹமனுல்லா குர்பாஸ் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி பட்டையை கிளப்பினார். ஹசரத்துல் ஷாசாய் 16 பந்துகளில் 13 ரன்களில் ஆட்டமிழக்க, ஆப்கானிஸ்தான் தனது முதல் விக்கெட்டை 46 ரன்களில் இழந்தது.

22 பந்தில் அரைசதம்

22 பந்தில் அரைசதம்

இதனையடுத்து அதிரடி வீரர் இப்ராஹிம் களத்துக்கு வந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குர்பாண், இப்ராஹிம் ஜோடி ஆப்பானிஸ்தான் இன்னிங்சை அழகாக கட்டமைத்தார். எனினும் குர்பாண் சூறாவளி போல் சுழன்று நின்று அடித்தார். 22 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதில் 4 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும்.

குர்பாஷ் 84 ரன்கள்

குர்பாஷ் 84 ரன்கள்

இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 10 ஓவர் முடிவில் 83 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்தும் கர்பாஷ் அதிரடியை நிறுத்தவில்லை. குறிப்பாக ஆட்டத்தின் 14 ஓவரில் 21 ரன்கள் குவிக்கப்பட்டது. இதனால் ஆட்டத்தின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் மளமளவென்று உயர்ந்தது. குர்பாஷ் 45 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார். இதில் 6 சிக்சர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும்.

176 ரன்கள் இலக்கு

176 ரன்கள் இலக்கு

இப்ராஹிம் ஷாட்ரன் 38 பந்துகளில் 40 ரன்கள் எடுக்க, நஜிபுல்லா வழக்கம் போல் 1 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசி 10 பந்துகளில் 17 ரன்கள் விளாசினார். இதனால் ஆப்கானிஸ்தான் இலக்கு 200 தொடும் என எதிர்பார்க்கப்பட்டது. 2 ரன் அவுட்டில் சிக்கி ஆப்கானிஸ்தானின் இன்னிங்கிஸ் தடம் மாறியது. இதன் மூலம் 20 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் 175 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியது.

Story first published: Saturday, September 3, 2022, 21:40 [IST]
Other articles published on Sep 3, 2022
English summary
Asia cup 2022 – Rahmanullah Gurbaz splendid innings – 176 target for SL22 பந்தில் அரைசதம்.. இலங்கையை அலறவிட்ட ஆப்கானிஸ்தான் வீரர்.. இமாலய இலக்கை எட்டுமா ஸ்ரீலங்கா ?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+