Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“S**** மாறி அணி அது” செய்தியாளர் சந்திப்பில் ராகுல் டிராவிட் செய்த குசும்பு.. இணையத்தில் சிரிப்பலை

துபாய்: பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ராகுல் டிராவிட் செய்த குசும்பு செயல் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Asia Cup: IND vs HK Match-ன் முக்கிய Highlights | Aanee's Appeal | *Cricket

ஆசிய கோப்பை தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

லீக் சுற்றில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தியிருந்த சூழலில் இந்த போட்டியில் பழிவாங்க பாகிஸ்தான் காத்துள்ளது.

பாகிஸ்தானுடனான போட்டி

பாகிஸ்தானுடனான போட்டி

இந்திய அணியின் பந்துவீச்சை விட பாகிஸ்தானின் பந்துவீச்சு சிறப்பாக உள்ளதாக ஒரு பேச்சு இருந்து வருகிறது. ஏனென்றால் ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்களை மட்டுமே எடுத்து 157 ரன்களை விட்டுக்கொடுத்தது. ஆனால் அதே ஹாங்காங் அணியை 38 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கி பாகிஸ்தான் புதிய சாதனை படைத்தது. இதனால் இந்தியாவின் பவுலிங் பலவீனம் என கூறுகின்றனர்.

டிராவிட்டின் குசும்பு

டிராவிட்டின் குசும்பு

இந்நிலையில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது, டிராவிட்டிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பாகிஸ்தான் அணியுடன் ஒப்பிடுகையில் இந்திய அணியின் பந்துவீச்சும் மிகசிறப்பாக இருக்கிறது. அவர்களிடம் தரமான பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். ஆனால் அதே நேரம், இந்திய அணியில் நல்ல முடிவுகளை கொடுக்கக்கூடிய பவுலர்கள் உள்ளனர் எனக் கூறினார்.

திடீரென சிரிப்பு

திடீரென சிரிப்பு

இந்த கருத்தை கூறிவிட்டு திடீரென ராகுல் டிராவிட் சிரித்தார். இதனால் குழப்பமடைந்த பத்திரிகையாளர்கள், ஏன் சிரிக்கிறீர்கள் என கேட்டனர். அதற்கு, " 4 எழுத்துக்களில் ஒரு வார்த்தையை கூற நினைத்தேன், ஆனால் அதனை கூற முடியவில்லை. Sல் தொடங்கும் அந்த வார்த்தையை நீங்கள் புரிந்துக்கொள்வீர்கள் என நினைக்கிறேன் எனக் கூறிவிட்டு மீண்டும் சிரித்தார்.

என்ன வார்த்தை

என்ன வார்த்தை

அதாவது 'SEXY' என்ற வார்த்தையை ராகுல் பயன்படுத்த நினைத்தார். ஆனால் ஆபாசமான வார்த்தை என்பதால் கூறவில்லை. இதனை புரிந்துக்கொண்ட பத்திரிகையாளர்கள் அனைவரும் சிரித்தனர். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இன்னும் சிலர், நம்ம ராகுல் டிராவிட்டா இது என ஆச்சரியப்பட்டுள்ளனர்.

Story first published: Sunday, September 4, 2022, 18:00 [IST]
Other articles published on Sep 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+