Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தினேஷ் கார்த்திக்கால் வரும் பிரச்சினை.. ஆசிய கோப்பைக்கான இந்திய அணி.. ரிஷப் பண்ட் வெளிப்படை பேச்சு!!

மும்பை: இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் உடனான போட்டி குறித்து ரிஷப் பண்ட் வெளிப்படையாக பதிலளித்துள்ளார்.

ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ள ஆசிய கோப்பை தொடர் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி தொடங்கவுள்ளது.

இந்த தொடருக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.

 ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் கேப்டன் ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா என மிகவும் பலமான வீரர்கள் உள்ளனர். ஆனால் இவர்கள் அனைவரையும் ஒரே ப்ளேயிங் 11ல் அடக்குவது சற்று சிரமமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

காரணம் என்ன

காரணம் என்ன

இந்த 7 வீரர்களையும் ப்ளேயிங் 11ல் சேர்த்தால், பந்துவீச்சிற்கு 4 வீரர்களை மட்டுமே சேர்க்க முடியும். ஹர்திக் பாண்ட்யாவை 5வது பவுலராக 4 ஓவர்களையும் வீச வைக்க வேண்டும். டி20 கிரிக்கெட்டில் 5 பவுலர்களை வைத்து களமிறங்கினால் பின்னடைவாக இருக்கும் என வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இதனால் ரிஷப் பண்ட் அல்லது தினேஷ் கார்த்திக் ஆகியோரில் யாரோ ஒருவருக்கு தான் வாய்ப்பு கொடுக்க முடியும்

ரிஷப் பண்ட் பேச்சு

ரிஷப் பண்ட் பேச்சு

இந்நிலையில் இதுகுறித்து ரிஷப் பண்ட் பேசியுள்ளார். அதில், ஒரு இடத்திற்கு நாங்கள் இரண்டு பேர் மோதுகிறோம் என்பதையே நாங்கள் நினைக்கவில்லை. நாங்கள் இருவருமே அணிக்கு என்ன தேவை என்பதை அறிந்து 100 சதவீதம் கொடுப்போம். அதில் யாருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் பிரச்சினை இல்லை.

 முடிவுகள் என்ன?

முடிவுகள் என்ன?

பயிற்சியாளர் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் பிட்ச் நிலைமை மற்றும் அணிக்கு எது உதவும் என்பதை புரிந்து முடிவெடுப்பார்கள் என பண்ட் கூறியுள்ளார். இந்திய அணி தனது முதல் போட்டியாக பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. எனவே இதில் சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு தான் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Monday, August 15, 2022, 17:06 [IST]
Other articles published on Aug 15, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+