Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேப்டனே விலகுவதா??.. ஆஃப்கானுடனான போட்டியில் இந்தியா பேட்டிங்.. ப்ளேயிங் 11 பல்வேறு மாற்றங்கள்!

துபாய்: ஆஃப்கானிஸ்தான் அணியுடனான போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11ல் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

IND vs AFG Virat Kohli-ன் அசுரத்தனமான ஆட்டம்! அபார சதம் *Cricket

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக 2 தோல்விகளை சந்தித்து தொடரில் இருந்து வெளியேறிவிட்டது.

இன்று நடைபெறும் கடைசி போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.

ரோகித் விலகல்

ரோகித் விலகல்

துபாயில் நடைபெறும் இந்த போட்டியில், டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து அறிவிக்கப்பட்ட இந்திய ப்ளேயிங் 11ல் யாரும் எதிர்பார்க்காத வகையில் கேப்டன் ரோகித் சர்மாவே விலகியுள்ளார். இதே போன்று ஹர்திக் பாண்ட்யாவுக்கும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

பேட்டிங் ஆர்டர்

பேட்டிங் ஆர்டர்

இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் ஓப்பனிங்கில் கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் களமிறங்கவுள்ளனர். முதல் விக்கெட்டிற்கு சூர்யகுமார் யாதவும், 2வது விக்கெட்டிற்கு ரிஷப் பண்ட்-ம் களமிறங்குகின்றனர். ரிஷப் பண்ட் கடந்த 2 போட்டிகளிலுமே சொதப்பியதால் இந்த முறை தன்னை நிரூபித்தே தீர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா விளையாடவுள்ளார்.

தினேஷ் கார்த்திக் கம்பேக்

தினேஷ் கார்த்திக் கம்பேக்

கடந்த சில போட்டிகளாக இந்திய அணியில் தினேஷ் கார்த்திக் இல்லாதது பெரும் பிரச்சினையாக பார்க்கப்பட்டது. ஏனென்றால் கடைசி ஓவர்களில் ஒரு நல்ல ஃபினிஷர் கிடைக்கவில்லை. எனவே இன்றைய போட்டியில் ஹர்திக் இல்லாததால் தினேஷ் கார்த்திக்கை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளனர்.

பவுலிங் படை

பவுலிங் படை

பந்துவீச்சை பொறுத்தவரையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அக்‌ஷர் பட்டேல் ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்துள்ளனர். வேகப்பந்துவீச்சில் நட்சத்திர வீரர் தீபக் சஹார் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இவரை தவிர்த்து புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரும் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர்.

 ப்ளேயிங் 11 விவரம்

ப்ளேயிங் 11 விவரம்

கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், தீபக் ஹூடா, அஸ்வின், அக்‌ஷர் பட்டேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், தீபக் சஹார்

Story first published: Thursday, September 8, 2022, 19:24 [IST]
Other articles published on Sep 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+