Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பையில் ஆப்ரிடியின் சாதனைக்கு ஆபத்து.. ரோகித் சர்மா முறியடிக்க வாய்ப்பு.. முழு விவரம் இதோ

மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 2 சாதனைளை மேற்கொள்ள ரோகித் சர்மாவுக்கு வாய்ப்புள்ளது. இந்திய அணி தனது முதல் போட்டியில் வரும் 28ஆம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது.

Recommended Video

IND vs ZIM Deepak Chahar சொன்ன Comeback-ன் பின்னணி

இந்த தொடரில் களமிறங்குவதன் மூலம் ரோகித் சர்மா, அதிக முறை ஆசிய தொடரில் விளையாடிய வீரர் என்ற பெருமையை பெறுவார்.

இந்த நிலையில், ரோகித் சர்மாவுக்கு மேலும் ஒரு சாதனையை உடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

26 சிக்சர்கள்

26 சிக்சர்கள்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் வரலாற்றில் அதிக சிக்சர் அடித்த வீரர் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஆப்ரிடி, முதலிடத்தில் உள்ளார். இவர் 27 போட்டிகளில் விளையாடி 26 சிக்சர்களை அடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 2வது இடத்தில் இலங்கை வீரர் ஜெயசூரியா 25 போட்டியில் 23 சிக்சர்களை விளாசி இருக்கிறார்.

ரோகித் 3வது இடம்

ரோகித் 3வது இடம்

இந்தப் பட்டியலில் ரோகித் சர்மா 3வது இடத்தில் இருக்கிறார். அவர் 27 போட்டிகளில் விளையாடி 21 சிக்சர் அடித்துள்ளார். இதனால் இந்தப் பட்டியலில் முதலிடத்திற்கு வருவதற்கு ரோகித் சர்மாவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் குறைந்தபட்சம் 6 சிக்சர் அடித்தாலே புதிய சாதனையை படைப்பார்.

சாதனைக்கு வாய்ப்பு

சாதனைக்கு வாய்ப்பு

இந்தப் போட்டி தற்போது டி20 தொடராக நடைபெறுவதால், சிக்சர் அடிக்கும் சூழல் ஏற்படும். இதில் குறைந்தபட்சம் ரோகித் சர்மா 5 போட்டிகளில் விளையாடுவார். மைதானமும், அவ்வளவு பெரியது இல்லை. இதனால் ரோகித் சர்மா புதிய ரெக்கார்டை படைப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

டாப் 5 வீரர்கள்

டாப் 5 வீரர்கள்

இந்தப் பட்டியலில் ரோகித் சர்மாவுக்கு பிறகு சுரேஷ் ரெய்னா இருக்கிறார். ரேய்னா 18 சிக்சர்களை விளாசி இருக்கிறார். தோனி 16 சிக்சர்களுடன் 5வது இடத்தில் இருக்கிறார். டாப் 5 இடத்தில் ரோகித் தவிர மற்ற அனைவரும் ஓய்வு பெற்றுவிட்டார்கள். இதனால், பல ஆண்டுகள் அழியாத வகையில் ஒரு சாதனை படைக்கும் வாய்ப்பு ரோகித் சர்மாவுக்கு எற்பட்டுள்ளது.

Story first published: Tuesday, August 23, 2022, 16:50 [IST]
Other articles published on Aug 23, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+