Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோகித் சர்மா செய்யும் பெரும் தவறு.. பாகிஸ்தான் போட்டியில் ரிஸ்க்.. தப்புமா இந்திய அணி? - என்ன காரணம்

துபாய்: பாகிஸ்தான் அணியுடனான போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11ல் ரோகித் சர்மா பெரும் தவறு செய்யவுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

Recommended Video

IND vs PAK இந்திய அணி பந்துவீச்சில் மிரட்டல் சுருண்ட Pakistan

ஆசிய கோப்பை தொடரில் இன்று இரு அணிகளும் மோதும் போட்டி துபாயில் இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.

பாகிஸ்தான் அணி இந்த முறையும் போட்டிக்கு ஒரு நாள் முன்னதாகவே ப்ளேயிங் 11-ஐ இறுதி செய்ததாக தெரிகிறது. ஆனால் இந்தியா மட்டும் குழப்பத்தில் உள்ளது.

இந்திய அணி

இந்திய அணி

இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் ஓப்பனிங்கிற்கு ரோகித் சர்மா, கே.எல்.ராகுல் ஆகியோர் உள்ளனர். முதல் விக்கெட்டிற்கு விராட் கோலி, 2வது விக்கெட்டிற்கு சூர்யகுமார் யாதவ் உள்ளனர். மிடில் ஆர்டரில் ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் இருக்கின்றனர். ஆனால் இதில் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் யாரேனும் ஒருவருக்கு தான் வாய்ப்பு கிடைக்கும்.

ப்ளேயிங் 11 பிரச்சினை

ப்ளேயிங் 11 பிரச்சினை

இவர்கள் இருவரையுமே சேர்த்தால் அணியில் 7 பேட்ஸ்மேன்கள் போக, மீதம் 4 இடங்கள் மட்டுமே இருக்கும். ஆனால் இந்திய அணி புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரை வேகப்பந்துவீச்சிலும், யுவேந்திர சாஹல், ஜடேஜா, அஸ்வின் ஆகிய 3 ஸ்பின்னர்களையும் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. ஏனென்றால் துபாய் பிட்ச் ஸ்பின்னர்களுக்கு நன்கு உதவும்.

இறுதி முடிவு என்ன?

இறுதி முடிவு என்ன?

எனவே தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவரை நீக்குவதற்கு ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். அதன் இறுதியில் தினேஷ் கார்த்திக்-ஐ நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் ரோகித் சர்மா செய்யப்போகும் மிகப்பெரிய தவறாக இது அமையலாம் என வல்லுநர்கள் கருதுகின்றனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

இளம் வீரர் ரிஷப் பண்ட் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் கலக்கினாலும், டி20 போட்டிகளில் சொதப்பி வருகிறார். அதுவும் முக்கியமான போட்டிகளில் பதற்றத்தால் அவுட்டாகி விடுகிறார். ஆனால் தினேஷ் கார்த்திக் தொடர்ச்சியாக டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். லோயர் ஆர்டரில் அணியை காப்பாற்றுவதற்காகவே தயார் செய்யப்பட்டுள்ளார்.

ரோகித்தின் ரிஸ்க்

ரோகித்தின் ரிஸ்க்

கடந்த சில போட்டிகளில் இந்திய அணியின் டாப் ஆர்டர் சொதப்பிய போதெல்லாம், அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் தான் காப்பாற்றி வந்தார். கடைசி நேரத்தில் அசால்ட்டாக ரன் குவித்தார். அப்படிப்பட்ட வீரரை புறகணித்துவிட்டு, ரோகித் ரிஸ்க் எடுக்கப்போகிறார் என ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

Story first published: Sunday, August 28, 2022, 20:55 [IST]
Other articles published on Aug 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+