Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பரிதாப நிலையில் 3 முன்னணி வீரர்கள்.. கடின முடிவை எடுக்கும் ரோகித் சர்மா.. பாகிஸ்தானுக்கு சாதகமாகுமா?

துபாய்: பாகிஸ்தான் அணியுடனான போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11ல் 3 வீரர்களின் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது.

Recommended Video

AsiaCup 2022 Rohit Sharma-க்கு Captaincy பயம் வந்துடுச்சி - Mohammed Hafeez *Cricket

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 2 வெற்றிகளுடன் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

அடுத்ததாக வரும் செப்டம்பர் 4ம் தேதியன்று சூப்பர் 4 சுற்றுக்காக மீண்டும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

ஆசிய கோப்பை

ஆசிய கோப்பை

முந்தைய போட்டியில் பெற்ற தோல்விக்காக பாகிஸ்தான் அணி காத்திருக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த சூழலில் தான் நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா நடப்பு தொடரில் இருந்து விலகி அதிர்ச்சி கொடுத்தார். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகி, அக்‌ஷர் பட்டேல் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ப்ளேயிங் 11 குழப்பம்

ப்ளேயிங் 11 குழப்பம்

இந்நிலையில் ஜடேஜாவின் விலகல் இந்திய ப்ளேயிங் 11ல் பெரும் குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. கடந்த போட்டியில் இந்திய அணி 2 ஸ்பின்னர்கள் 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் சென்றது. ஆனால் தற்போது துபாய் பிட்ச் ஸ்பின்னர்களுக்கு அதிக ஒத்துழைப்பு தரும் என்பதால் 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கினால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற சூழல் உள்ளது.

பேட்டிங்கில் உதவி

பேட்டிங்கில் உதவி

ரவீந்திர ஜடேஜா ஒரு ஸ்பின்னராக மட்டுமல்லாமல், டாப் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேனாக உதவினார். இதுவே வெற்றிக்கு காரணமானது. ஆனால் தற்போது வந்துள்ள அக்‌ஷர் பட்டேல், எந்தளவிற்கு பேட்டிங் ஃபார்மில் இருக்கிறார் என்பது குழப்பமாக உள்ளது. ஒருவேளை அக்‌ஷர் பட்டேலின் பேட்டிங் சரியாக இல்லையென்றால், ரிஷப் பண்ட்-ஐ ப்ளேயிங் 11ல் கொண்டு வருவதை தவிர வேறு வழியில்லை.

தினேஷ் கார்த்திக்கின் நிலை

தினேஷ் கார்த்திக்கின் நிலை

ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டாலும், இந்தியாவுக்கு சுழற்பந்துவீச்சில் அக்‌ஷர் பட்டேலும் கண்டிப்பாக தேவை. இவர்கள் இருவரையும் ஒரே அணியில் சேர்த்து விட்டால் வேறு வழியின்றி தினேஷ் கார்த்திக் நீக்கப்படுவார். எனவே இவர்கள் மூவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

Story first published: Saturday, September 3, 2022, 18:16 [IST]
Other articles published on Sep 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+