Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“வேறு வழியே கிடையாது போலையே”.. பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய ப்ளேயிங் 11.. ரசிகர்கள் சந்தேகம்!

துபாய்: பாகிஸ்தான் அணியுடனான போட்டிக்காக இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Recommended Video

AsiaCup 2022 தொடரில் India அணிக்கு பாரபட்சமா? Pakistan முன்னாள் வீரர்கள் கேள்வி *Cricket

ஆசிய கோப்பை தொடரில் இன்று நடைபெறும் சூப்பர் 4 சுற்றுக்கான போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

லீக் சுற்றின் போது இரு அணிகளும் மோதிய போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. எனவே இன்று பாகிஸ்தான் பழிவாங்க முனைப்புடன் உள்ளது.

ப்ளேயிங் 11 பிரச்சினை

ப்ளேயிங் 11 பிரச்சினை

இந்நிலையில் இந்த போட்டிக்கான ப்ளேயிங் 11ல் தான் பிரச்சினை உருவாகியுள்ளது. ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக விலகியுள்ளதால், அவரின் இடத்தை யார் நிரப்புவார் என்ற குழப்பம் உள்ளது. பாகிஸ்தான் அணியின் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் முகமது நவாஸை சமாளிக்க இந்திய அணியில் இடதுகை பேட்ஸ்மேன் கண்டிப்பாக தேவை என்ற சூழல் உள்ளது. இதனால் தான் கடந்த போட்டியில் ஜடேஜா டாப் ஆர்டரில் களமிறங்கினார்.

இடதுகை வீரர்

இடதுகை வீரர்

ஜடேஜாவின் இடத்திற்கு மற்றொரு இடதுகை சுழற்பந்துவீச்சாளரான அக்‌ஷர் பட்டேல் சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது. ஒரு ஸ்பின்னராக மட்டுமல்லாது, பேட்ஸ்மேனாகவும் லோயர் ஆர்டரில் நல்ல பேட்ஸ்மேனாகவும் இருப்பார். ஆனால் அவரை டாப் ஆர்டரில் களமிறக்கினால் பயன்படுவாரா என்பது சந்தேகம் தான். தினேஷ் கார்த்திக் கடினமான சூழலில் தேவை என்பதால் ரிஷப் பண்ட்-க்கு வாய்ப்பு கொடுப்பது கடினமாகும்.

ஆவேஷ் நீக்கம்

ஆவேஷ் நீக்கம்

இதே போல வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவர் குறைக்கப்படுவார் எனத் தெரிகிறது. துபாய் பிட்ச்-ல் வேகம் குறைந்து வருவதால், சுழற்பந்துவீச்சாளர்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றனர். எனவே ஆவேஷ் கான் நீக்கப்பட்டு, 3வது ஸ்பின்னராக ரவிச்சந்திரன் அஸ்வின் சேர்க்கப்படலாம். இதன் மூலம் ஹர்திக் பாண்ட்யா உட்பட 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் 3 ஸ்பின்னர்களுடன் இந்தியா களமிறங்கலாம்.

ப்ளேயிங் 11

ப்ளேயிங் 11

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அக்‌ஷர் பட்டேல், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், யுவேந்திர சாஹல், அஸ்வின்

Story first published: Sunday, September 4, 2022, 10:21 [IST]
Other articles published on Sep 4, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+