
முதல் போட்டி
டி20 உலகக்கோப்பை தொடரில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுப்பதற்காக தயாராகி வரும் இந்திய அணி, அதற்காக பலமான ப்ளேயிங் 11-ஐ உருவாக்கி வருகிறது. அந்த வகையில் நேற்றைய தினம் பிசிசிஐ தனது சமூகவலைதள பக்கத்தில் மறைமுகமாக இந்தியாவின் ப்ளேயிங் 11-ஐ வெளியிட்டிருந்தது. வீரர்களின் புகைப்படத்தை வரிசையாக பதிவிட்டு அதனை உறுதி செய்திருந்தது.

இந்திய அணி
இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரையில் அனைவரும் எதிர்பார்த்தபடியே ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா என 7 பலமான வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் பவுலிங்கில் தான் யாரும் எதிர்பார்க்காத வகையில் அமைந்துள்ளது.

பவுலிங்கில் ஏமாற்றம்
ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் இருவரும் சேர்க்கப்பட்டுள்ளதால், மீதம் 4 இடங்கள் மட்டுமே உள்ளன. இதிலும் ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவரும் நீக்கப்பட்டுள்ளனர். ஒரே ஒரு ஸ்பின்னராக யுவேந்திர சாஹல் மட்டுமே சேர்க்கப்பட்டிருக்கிறார். வேகப்பந்துவீச்சில் புவனேஷ்வர் குமார், ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் என மூன்று பேருமே வாய்ப்பு பெற்றுள்ளனர்.

ரோகித் எடுத்த ரிஸ்க்
இவர்களுடன் சேர்த்து 4வது வேகப்பந்துவீச்சாளராக ஹர்திக் பாண்ட்யா இருக்கிறார். இதன் மூலம் 4 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்துவீச்சாளர் என 5 பவுலர்கள் மட்டுமே மொத்தமாக இருக்கின்றனர். டி20 போட்டியில் வெறும் 5 பவுலர்களை மட்டும் இந்தியா களமிறங்குவது மிகப்பெரிய ரிஸ்க் என வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











