ஆசியக்கோப்பை அட்டவணை வெளியானது.. இந்தியா - பாகிஸ்தான் போட்டி எப்போது?.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
சென்னை: ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
ஆசிய நாடுகளுக்கு இடையே நடைபெறும் பிரபல கிரிக்கெட் தொடரான ஆசியக்கோப்பை இலங்கையில் நடைபெறுவதாக இருந்தது.
அந்நாட்டியில் நிலவும் அரசியல் பிரச்சினைகள் காரணமாக தற்போது இந்த தொடர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

அட்டவணை வெளியீடு
இந்நிலையில் போட்டியின் முழு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஆகஸ்ட் 27ம் தேதி முதல் ஆசியக்கோப்பை போட்டிகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப்போட்டி செப்டம்பர் 11ம் தேதி நடைபெறவுள்ளது. முதல் மற்றும் இறுதிப்போட்டி இரண்டுமே துபாய் சர்வதேச மைதானத்தில் தான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போட்டி முறை
மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குரூப்பிற்கும் தலா 3 அணிகள் மோதிக்கொள்ளும். அதன்படி ஏ குரூப்பில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. பி பிரிவில் இலங்கை, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகள் உள்ளன. தகுதிச்சுற்றின் அடிப்படையில் ஹாங்காங், குவைத், சிங்கப்பூர், அமீரகம் அணிகளில் இருந்து ஏதேனும் ஒரு அணி 'ஏ' பிரிவில் சேர்க்கப்படும்.

இந்தியா - பாக். ஆட்டம்
ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியானது ஆகஸ்ட் 28ம் தேதியன்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. டி20 உலகக்கோப்பை மற்றும் 2019 ஆசியக்கோப்பையில் பாகிஸ்தானிடம் அடைந்த தோல்விக்கு இந்தியா பழித்தீர்க்க காத்துள்ளது.

2வது சர்ஃபரைஸ்
ஒருவேளை இரு அணிகளும் லீக் சுற்றில் சிறப்பாக விளையாடி முன்னேறினால் சூப்பர் 4 சுற்றிலும் மீண்டும் நேருக்கு நேர் மோதிக்கொள்ள வாய்ப்புள்ளது. இதுமட்டுமல்லாமல் இறுதிப்போட்டியிலும் இரு அணிகள் மோதுவதற்கு அதிக வாய்ப்புள்ளதால் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications