இலங்கை பயிற்சியாளரின் யுத்தி.. ரகசிய வார்த்தைகள் மூலம் செய்தி.. கிரிக்கெட்டில் பரவும் புதிய முறை
துபாய்: ஆசிய கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் இலங்கை அணி புதிய யுத்தி ஒன்றை கடைப் பிடித்தது.

முன்பு எல்லாம், அணி வீரர்கள் தவறு செய்தால், பயிற்சியாளர்கள் பிளேயிங் லெவனில் இடம்பெறாத வீரர்களை விட்டு தண்ணீர் கொடுப்பது போல் செய்தி சொல்வார்கள்.
Recommended Video
ஆனால் டி20 கிரிக்கெட்டில் ஓவருக்கு ஓவர் ஆட்டத்தின் சூழல் மாறும். மேலும் வீரர்களை தண்ணீர் பாட்டில் கொண்டு செய்தி சொல்லும் காலம் எல்லாம் மலையேறி விட்டது.
இந்த நிலையில் தான் தற்போது புதியமுறை ஒன்று சர்வதேச கிரிக்கெட்டில் வந்துள்ளது. இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக இருந்த கிறிஸ் சில்வர்வுட், இரண்டு பேப்பரில் ஒரு எழுத்தையும், ஒரு நம்பரையும் வைப்பார். இந்த ரகசிய வார்த்தைகளை பயன்படுத்தி கேப்டன் அதற்கு ஏற்ப மாற்றத்தை செய்வார்.
தற்போது, கிறிஸ் சில்வர்வுட் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படுகிறார். இதனால் தன்னுடைய யுத்தியை இலங்கை அணிக்காகவும் அவர் நடைமஐறப்படத்தினார். வங்கதேசம் பேட்டிங் செய்யும் போது 2 D என்று பேப்பரில் காண்பிக்கப்பட்டது. இதன் அர்த்தம் என்ன என்று ரசிகர்களும் யோசித்தனர்.
அதற்கு பேட்ஸ்மேன் டிரைவ் செய்கிறார். அங்கு 2 ஃபில்டர்களை நிறுத்து என்று சொல்கிறார் என்று ரசிகர்களும் அதன் ரகசியங்களை டீகோட் செய்து வருகின்றனர். இதே போன்று D5 என்று ரசிய கோட்களும் கிறிஸ் சில்வர்வுட்டால் பயன்படுத்தப்பட்டது.


Click it and Unblock the Notifications