ஆசிய கோப்பை: பாகிஸ்தானுடனான மோதல்.. ரோகித் சர்மாவுக்கு கங்குலி முக்கிய அட்வைஸ்.. என்ன தெரியுமா?
மும்பை: பாகிஸ்தான் அணியை எதிர்கொள்வது குறித்து இந்திய அணிக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி முக்கிய அறிவுரையை கூறியுள்ளார்.
Recommended Video
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 27ம் தேதி முதல் தொடங்கி செப்டம்பர் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறவுள்ளது.

ஆசிய கோப்பை தொடர்
2017ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2021ம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடர் என இரண்டிலுமே பாகிஸ்தானிடம் இந்திய அணி தோல்வியை தழுவியது. குறிப்பாக உலகக்கோப்பை வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் தோற்றது. எனவே இந்த ஆசிய கோப்பையில் அதற்கு பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சவுரவ் கங்குலி அட்வைஸ்
இந்நிலையில் இதுகுறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி முக்கிய அறிவுரையை கூறியுள்ளார். அதில், இதனை நான் ஆசிய கோப்பை தொடர் என்று மட்டும் தான் பார்க்கிறேன். இந்தியா vs பாகிஸ்தான் தொடரை போன்று யாரும் பார்க்க வேண்டாம். நான் விளையாடிய நாட்களில் இந்தியா - பாகிஸ்தான் மோதல் என்பதை, மற்ற போட்டிகளை போன்றே தான் விளையாடினேன். அந்த போட்டியை வெல்ல வேண்டும் என்று தான் நினைப்பேன்.

நம்புக்கை இருக்கிறது
இதே போன்ற மனநிலையுடன் மட்டுமே ரோகித் சர்மா மற்றும் இந்திய அணி வீரர்கள் களமிறங்க வேண்டும். இந்திய அணி தற்போது சிறப்பான பலத்துடன் உள்ளது. சமீப காலமாக இந்திய அணி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது. இதே போன்ற ஆட்டத்தை ஆசிய கோப்பையில் விளையாடி கோப்பை வெல்வார்கள் என நம்புவதாக கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இரண்டு சர்ஃப்ரைஸ்
இந்த முறை ஆசிய கோப்பையில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து அளிக்கும் விதமாக 3 முறை இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொள்ள வாய்ப்புள்ளது. லீக் சுற்றில் ஒருமுறையும், சூப்பர் 4 சுற்றில் இரண்டாவது முறையும் மோதுவார்கள். ஒருவேளை இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றால் 3வது முறையும் இரு அணியின் மோதலை ரசிகர்கள் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications