
அதிரடி தொடக்கம்
ஹசரத்துல் ஷாசாய் 16 பந்துகளில் 13 ரன்களில் ஆட்டமிழக்க, ஆப்கானிஸ்தான் தனது முதல் விக்கெட்டை 46 ரன்களில் இழந்தது. இதனையடுத்து அதிரடி வீரர் இப்ராஹிம் களத்துக்கு வந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். குர்பாண், இப்ராஹிம் ஜோடி ஆப்பானிஸ்தான் இன்னிங்சை அழகாக கட்டமைத்தார். எனினும் குர்பாண் சூறாவளி போல் சுழன்று நின்று அடித்தார். 22 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதில் 4 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும்.

குர்பாஷ் 84 ரன்கள்
இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 10 ஓவர் முடிவில் 83 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்தும் கர்பாஷ் அதிரடியை நிறுத்தவில்லை. குறிப்பாக ஆட்டத்தின் 14 ஓவரில் 21 ரன்கள் குவிக்கப்பட்டது. இதனால் ஆட்டத்தின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் மளமளவென்று உயர்ந்தது. குர்பாஷ் 45 பந்துகளில் 84 ரன்கள் விளாசினார். இதில் 6 சிக்சர்களும், 4 பவுண்டரிகளும் அடங்கும். இப்ராஹிம் ஷாட்ரன் 38 பந்துகளில் 40 ரன்கள் எடுக்க, நஜிபுல்லா வழக்கம் போல் 1 சிக்சர், ஒரு பவுண்டரி விளாசி 10 பந்துகளில் இதன் மூலம் 20 ஓவர் முடிவில் ஆப்கானிஸ்தான் 175 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியது.

இலங்கை அபாரம்
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் தொடக்க வீரர் நிசாங்கா 28 பந்துகளில் 35 ரன்கள் விளாசினார். இதில் குசேல் மெண்டிஸ் 19 பந்துகளில் 36 ரன்கள் குவித்தார். இதில் 3 சிக்சர்களும், 2 பவுண்டரிகளும் அடங்கும். அசலாங்கா 8 ரன்களில் வெளியேற, குணதிலகா 20 பந்துகளில் 33 ரன்கள் விளாசினார்.

பழித்தீர்த்த இலங்கை
கேப்டன் ஷனாகா 10 ரன்களில் வெளியேற, மீண்டும் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. பனுகா ராஜபக்சா 14 பந்துகளில் 31 ரன்கள் விளாச, ஹசரங்கா 16 ரன்கள் சேர்த்தார். இதனால் 5 பந்துகள் எஞ்சிய நிலையில், இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் இலங்கை அணி ஆப்கானிஸ்தானை பழித்தீர்த்து கொண்டது. இந்த இலங்கை அணியின் ஆட்டம் பழைய வீரர்களை நியாபகப்படுத்தியதால் நாயகன் மீண்டும் வருகிறார் என்ற மாஸ் பாடலை போட்டு ரசிகர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











