Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை முதல் போட்டி.. இலங்கை Vs ஆப்கானிஸ்தான் நாளை மோதல்.. பிளேயிங் லெவன் இதோ

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை முதல் தொடங்குகிறது. இதில் முதல் போட்டியிலேயே 5 முறை சாம்பியனான இலங்கை, ஆப்கானிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

Recommended Video

Asia Cup 2022: Pakistan-ல் Mohammad Wasim விலகல்! Hasan Ali வந்துட்டார்

இரு அணிகளும் கடந்த 2016ஆம் ஆண்டு மோதிய போது ஆப்கானிஸ்தான் அணியே வெற்றி பெற்றது.

இலங்கை அணிக்கு தொடக்கமே பின்னடைவை தந்துள்ளது . அந்த அணியின் நட்சத்திர வீரர் துஷ்மந்த் சமீரா காயம் காரணமாக விலகியுள்ளார்.

இலங்கை முக்கிய வீரர்கள்

இலங்கை முக்கிய வீரர்கள்

இருப்பினும் , இலங்கை அணி வலுவான நிலையிலேயே உள்ளது. ஆல்ரவுண்டர் ஷனுகா தலைமையிலான அணியில் அதிரடி வீரர் பனுகா ராஜபக்சா, ஆல்ரவுண்டர் ஹசரங்கா, தினேஷ் சந்திமால் போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர். நடுவரிசையில் வாய்ப்பு அளிக்கப்படும் குசேல் மெண்டிசை தொடக்க வீரராக புரோமோஷன் கொடுத்தால் அந்த அணிக்கு அது நல்ல பயனை தரும்.

வெற்றி பெறுமா?

வெற்றி பெறுமா?

காரணம், தொடக்க வீரராக அவர் 14 இன்னிங்சில் களமிறங்கி 447 ரன்களை விளாசி இருக்கிறார். ஸ்ட்ரைக் ரேட் 138 என்ற அளவில் இருக்கிறது. நடப்பாண்டில் இன்னும் இலங்கை ஒரு டி20 தொடரை கூட வெல்லவில்லை. இதனால், அந்த நிலையை மாற்றும் நோக்கில் இலங்கை அணி களமிறங்கி உள்ளது. ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் அந்த அணி இழந்தது. அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சென்வாரி அணிக்கு திரும்பியது பலமாக பார்க்கப்படுகிறது.

ஆப்கான் நட்சத்திரங்கள்

ஆப்கான் நட்சத்திரங்கள்

இதே போன்று நஜிபுல் சார்தான் எதிரணிக்கு தனது பேட்டிங் மூலம் பயம்முறுத்துவார் என எதிர்பார்க்கலாம். கடந்த முறை அயர்லாந்துக்கு எதிராக 24 பந்தில் அரைசதம் அடித்தது ஒரு உதாரணம். இதே போன்று ரஷித் கான் , இடது கை பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை லாவகமாக வீழ்த்துவதில் வல்லவர். இலங்கை அணி பேட்ஸ்மேன்கள் ராஜபக்சா, அசலங்கா, குணதிலகா ஆகியோருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்துவார்.

பிளேயிங் லெவன்

பிளேயிங் லெவன்

இலங்கை XI 1, குணதிலகா, 2, நிசாங்கா, 3, அசலங்கா, 4, பனுகா ராஜபக்சா, 5, குசேல் மெண்டிஸ், 6, ஷனாகா, 7, ஹசரங்கா, 8, கருணரத்னே, 9, பதிரனா, 10,, மகிஷ் தீக்சணா, 11, ஜெயவிக்ரம்மா

ஆப்கானிஸ்தான் XI 1, ஹஸ்ரத்துல்லா ஷசாய், 2, குர்பாஷ், 3, இப்ராஹிம் சாட்ரான், 4, நஜிபுல் சர்தான், 5, ஷின்வாரி, 6, முகமது நபி, 7, ஓமர்சாய், 8, ரஷித் கான், 9, நவீன் உல் ஹக், 10, முஜிபுர் ரஹ்மான், 11, ஃபரித் அகமது மாலிக்

Story first published: Friday, August 26, 2022, 22:15 [IST]
Other articles published on Aug 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+