Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இனிமேலாவது அதை செய்யாதீர்கள்.. ” ரோகித், விராட் கோலியின் அவசர புத்தி.. கவாஸ்கர் கடும் சாடல்!

துபாய்: ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி செய்த தவறு குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

Recommended Video

IND vs PAK Hardik Pandya-க்கு Kiss அடித்த Afghanistan ரசிகர்கள் *Cricket

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி அசத்தியது.

பாகிஸ்தான் போட்டி

பாகிஸ்தான் போட்டி

148 ரன்கள் என்ற சுலபமான இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க வீரர் கே.எல்.ராகுல் முதல் பந்திலேயே அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இதனால் இந்தியாவுக்கு பின்னடைவு ஏற்பட்டது. எனினும் விராட் கோலி - ரோகித் சர்மா ஜோடி நிதானமாக விளையாடி முதல் விக்கெட்டிற்கு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதனால் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை அதிகரித்தது.

தொடர் விக்கெட்கள்

தொடர் விக்கெட்கள்

ஆனால் சிறிய தவறால் ரோகித், விராட் கோலி இருவருமே அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். நீண்ட நேரமாக சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து வந்த ரோகித் சர்மா, 8வது ஓவரில் முகமது நவாஸ் வீசிய பந்தை லாங் ஆஃப் திசையில் தூக்கி அடித்தார். அனால் ஸ்லோயர் பந்து என்பதால் நேராக ஃபீல்டரிடம் கேட்ச் சென்றது.

கோலியின் தவறு

கோலியின் தவறு

அவசரத்தில் ரோகித் தவறு செய்துவிட்டார் என ரசிகர்கள் அதிருப்தியில் இருந்த நிலையில், கோலியும் இதே தவறை செய்தார். 10 வது ஓவரில் நவாஸ் வீசிய அதே ஸ்லோயர் பந்தை, லாங் ஆஃப் திசையில் தூக்கி அடிக்க முயன்றார். சொல்லி வைத்தது போன்று ரோகித்தை போலவே கோலியும் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

 கவாஸ்கர் சாடல்

கவாஸ்கர் சாடல்

இந்நிலையில் இவர்களின் தவறு குறித்து முன்னாள் வீரர் கவாஸ்கர் அதிருப்தி தெரிவித்துள்ளார். அதில், ரோகித் மற்றும் கோலிக்கு நீண்ட நேரம் நின்று விளையாட வாய்ப்பிருந்தது. அவர்கள் நன்கு ரன் குவித்து வந்தனர். கோலிக்கு நேற்று அதிர்ஷ்டம் இருந்தது. கேட்ச் தவறியது, நிறைய இன்சைட் எட்ஜ்கள் என வந்த போதும், நல்ல ஷாட்கள் நிறைய ஆடினார்.

தேவையில்லாத ஷாட்கள்

தேவையில்லாத ஷாட்கள்

கோலி - ரோகித் தங்களுக்கு கிடைத்த சிறப்பான தொடக்கத்தை 60 - 70 ரன்களுக்கு மாற்றியிருக்க வேண்டும். ஆனால் மோசமான ஷாட்களால் சொதப்பினர். அது போன்ற சூழலில் பெரிய ஷாட்கள் தேவையே கிடையாது. ரன் ரேட் 19 - 20 என தேவைப்பட்டிருந்தால் சிக்ஸர் அடிக்கலாம். ஆனால் குறைந்த ரன்ரேட்டில் இப்படி செய்திருக்க கூடாது. ஒருவேளை 70 - 80 ரன்களை அவர்கள் அடித்திருந்தால் சிக்ஸருக்கு சென்றிருக்கலாம். இனி வரும் போட்டிகளில் இதனை கற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறேன்.

Story first published: Monday, August 29, 2022, 15:48 [IST]
Other articles published on Aug 29, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+