Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை - சூப்பர் 4 சுற்று இன்று தொடக்கம்.. இந்தியாவுக்கு எத்தனை போட்டிகள்.. முழு அட்டவணை விவரம்

துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 6 அணிகள் பிரதான சுற்றில் பங்கேற்றன.

Recommended Video

IND vs PAK Hardik Pandya சொன்ன Chasing ரகசியம் *Cricket

இதில் வங்கதேசம், ஹாங்காங் அணிகள் நினைத்த படியே வெளியேறிய நிலையில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகள் சூப்பர் 4 சுற்றில் விளையாடுகிறது.

சூப்பர் 4 சுற்று இன்று முதல் தொடங்கும் நிலையில், முதலில் அப்படி என்றால் என்ன? போட்டி எப்படி நடைபெறும் என்பதை பார்க்கலாம்.

சூப்பர் 4 என்றால் என்ன?

சூப்பர் 4 என்றால் என்ன?

சூப்பர் 4 சுற்றில் ரவுண்ட் ராபின் முறைபடி, ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒரு முறை மோதும். இந்த சுற்றின் முடிவில் முதல் 2 இடத்தை பிடிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு தகதி பெறும். சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால், இந்த சுற்றில் ஒவ்வொரு அணியும் 3 போட்டிகிளில் விளையாடும். சூப்பர் 4 சுற்றில் அனைத்து அணிகளும் கொஞ்சம் பலம் வாய்ந்த அணிகள் என்பதால், இனி தான் ஆசிய கோப்பை போட்டிகள் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

இந்தியா Vs பாகிஸ்தான்

இந்தியா Vs பாகிஸ்தான்

சூப்பர் 4 சுற்றில் இன்றைய முதல் ஆட்டத்தில் இலங்கை அணியும், ஆப்கானிஸ்தானும் ஷார்ஜாவில் மோதுகிறது. லீக் சற்றில் அடைந்த தோல்விக்கு பழித்தீர்க்கும் முனைப்புடன் இலங்கை இன்றைய ஆட்டத்தில் சந்திக்கும். நாளை ஞாயிற்றுகிழமை மீண்டும் இந்தியா, பாகிஸ்தான் 2வது முறையாக மோதுகிறது.

இந்தியா Vs இலங்கை

இந்தியா Vs இலங்கை

முதல் போட்டியே ரசிகர்களுக்கு செம விருந்த கொடுத்த நிலையில், முக்கிய கட்டத்தில் இரு அணிகளும் துபாயில் மோதுகின்றன. இதன் பிறகு திங்கட்கிழமை ஓய்வு நாளாக அறிவிக்கப்பட, மீண்டும் செவ்வாய்கிழமை இந்தியாவும், இலங்கையும் முதல் முறையாக நடப்பு தொடரில் மோதுகின்றன.

இறுதி போட்டி எப்போது?

இறுதி போட்டி எப்போது?

இதனைத் தொடர்ந்து வரும் புதன்கிழமை 7ஆம் தேதி பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் மோதுகின்றன. அதன் பின்னர் வியாழக்கிழமை வரும் 8ஆம் தேதி இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் பலப்பரீட்சை நடத்துகின்றன. வரும் 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை இலங்கையும், பாகிஸ்தானும் விளையாடுகின்றன. வரும் 11ஆம் தேதி ஞாயிறு இறுதிப் போட்டி நடைபெறும். இந்த சுற்றில் அனைத்து போட்டியிலும் வென்றால் இறுதிப் போட்டிக்கு சுலபமாக செல்ல முடியும்.

Story first published: Saturday, September 3, 2022, 0:42 [IST]
Other articles published on Sep 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+