Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தொட்டது எல்லாம் தங்கம்.. இலங்கை கேப்டனுக்கு ஆரம்பமே குதுகலம்.. ஆப்கானுக்கு எதிராக அதிரடி முடிவு

ஷார்ஜா : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் இல்ங்கை அணியும், ஆப்கானிஸ்தானம் பலப்பரீட்சை நடத்துகிறது.

Asia cup 2022 – Super 4 SL takes a brilliant decision against Afghanistan

ஏற்கனவே லீக் சுற்றில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 105 ரன்களில் இலங்கை அணி சுருண்டது.

Recommended Video

AsiaCup 2022 Rohit Sharma-க்கு Captaincy பயம் வந்துடுச்சி - Mohammed Hafeez *Cricket

இதனால் பதிலடி தரும் உத்வேகத்துடன் இலங்கை அணி இன்றைய ஆட்டத்தில் களமிறங்கியுள்ளது.

ஷார்ஜா மைதானம் சிறியதாக இருந்தாலும், பந்த பேட்டிற்க சரி வர வராது. மேலும் போட்டி போக போக, பேட்டிங் செய்யும் அணிக்கு சூழல் சாதகமாக மாறும். இதனால், டாஸ் வெல்லும் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததே சிறந்த முடிவாக இருக்கும். இந்த நிலையில் தான் இலங்கை கேப்டன் ஷனாகாவும் டாஸ் வென்று முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார்.

இது குறித்து பேசிய அவர், எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக சேஸிங் செய்வார்கள். கடந்த போட்டியில் எங்கள் தொடக்க வீரர்கள் நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். மற்ற வீரர்களும் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடினார்கள். வங்கதேசத்துக்கு எதிராக விளையாடிய வீரர்களே இன்றைய ஆட்டத்திலும் களமிறங்குகிறார்கள் என்று கூறினார்.

டாஸை இழந்தது குறித்து பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி, நாங்கள் டாஸ் வென்று பேட்டிங் செய்வதாக இருந்தோம். இதனால் எனக்கு மகிழ்ச்சி தான். முதலில் பேட்டிங் ஆடி பெரிய இலக்கை நிர்ணயிக்க விரும்புகிறோம். எங்கள் பந்துவீச்சாளர்கள் செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் அணியில் அசமத்துல்லாவுக்கு பதில், சமியுல்லா விளையாடுகிறார்.

Story first published: Saturday, September 3, 2022, 19:49 [IST]
Other articles published on Sep 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+