Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பண பலத்தை பயன்படுத்தும் இந்தியா.. அதுவும் பாகிஸ்தானை புறக்கணிக்க?.. ஆசிய கோப்பையில் புது சர்ச்சை!

துபாய்: ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை நேரடியாக இந்திய அணி புறக்கணித்தது தெரியவந்துள்ளது.

Recommended Video

Asia Cup 2022: Pakistan Team-ன் SWOT Analysis! | Aanee's Appeal | *Cricket

மொத்தமாக 6 நாட்கள் பங்கேற்கும் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது.

இந்த தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே அமீரகம் சென்றடைந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

ஆசிய கோப்பை தொடர்

ஆசிய கோப்பை தொடர்

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் ஆகஸ்ட் 28ம் தேதி மாலை துபாயில் நடைபெறவுள்ளது. மேலும் இந்தாண்டு இந்த இரு அணிகளும் தான் கோப்பையை வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளது. இரு அணி ரசிகர்களும் சண்டையிட்டு கொண்டாலும், வீரர்கள் நட்புரீதியாக பேசி வருகின்றனர்.

தனி ஹோட்டல்

தனி ஹோட்டல்

இந்நிலையில் பாகிஸ்தான் அணியை பிசிசிஐ நேரடியாக புறக்கணித்தது தெரியவந்துள்ளது. ஆசிய கோப்பை தொடருக்காக பாகிஸ்தான் உள்ளிட்ட அனைத்து அணிகளும் பிசினஸ் பே என்ற ஹோட்டலில் தங்கியுள்ளனர். ஆனால் இந்திய அணி மட்டும் ஸ்பெஷலாக பால்ம் ஜுமெய்ரா ரெசார்ட்டில் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஸ்பெஷல் அனுமதி

ஸ்பெஷல் அனுமதி

போட்டி நடைபெறும் துபாய் சர்வதேச மைதானத்தில் இருந்து இந்த ஹோட்டல் 27கிமீ தூரம் தொலைவில் உள்ளது. எனினும் அதனை கருத்தில் கொள்ளாமல் இந்தியா மட்டும் தனியாக தங்கியுள்ளது. இதே போன்று பயிற்சியிலும் இந்தியா ஸ்பெஷல் அனுமதி பெற்றுள்ளது. அதாவது அமீரகத்தில் வெப்பம் அதிகமாக இருப்பதால், இந்திய அணி மட்டும் மாலை நேரத்தில் பயிற்சி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜெய் ஷா காரணமா?

ஜெய் ஷா காரணமா?

பிசிசிஐ இதுபோன்று செய்வது இது முதல் முறையல்ல. கடந்த டி20 உலகக்கோப்பை தொடரின் போதும் இந்தியாவுக்கு மட்டும் ஸ்பெஷல் வசதிகள் இருந்தன. ஆசிய கோப்பை தொடரின் துணை தலைவராக இருக்கும் ஜெய் ஷா தான் வீரர்களின் தங்குமிடம் குறித்த ஏற்பாடுகளை கவனித்துக்கொள்கிறார். எனவே அவரும் இதற்கு காரணமாக இருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Story first published: Friday, August 26, 2022, 17:46 [IST]
Other articles published on Aug 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+