Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“இனி அதை செஞ்சி என்ன பலன்”.. ஆஃப்கான் போட்டிக்கான இந்திய ப்ளேயிங் 11.. 2 முக்கிய வீரர்கள் கம்பேக்!

துபாய்: ஆஃப்கானிஸ்தான் அணியுடனான போடிக்கான இந்திய ப்ளேயிங் 11ல் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெளியேறி ஏமாற்றியது.

இன்று இரவு நடைபெறும் கடைசி ஆறுதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியுடன் இந்தியா மோதவுள்ளது.

ஆஃப்கான் போட்டி

ஆஃப்கான் போட்டி

தொடர்ச்சியாக 2 போட்டிகளில் தோல்வியை சந்தித்த இந்தியா, இன்று நடைபெறும் கடைசி போட்டியிலாவது வெற்றியுடன் விடைபெற வேண்டும் கட்டாயம் உள்ளது. ஆனால் ஆஃப்கானிஸ்தான் அணியை வெல்வதும் அவ்வளவு சாதாரணமாக தெரியவில்லை. நேற்று பாகிஸ்தானுடன் நடைபெற்ற போட்டியில் 130 என்ற இலக்கை அட்டகாசமாக கட்டுப்படுத்தியிருந்தது. எனவே ஆஃப்கானை எதிர்கொள்ள இந்தியா பெரும் பலத்தோடு களமிறங்க வேண்டியுள்ளது.

ப்ளேயிங் 11 மாற்றம்

ப்ளேயிங் 11 மாற்றம்

இந்தியாவின் டாப் ஆர்டரை பொறுத்தவரையில் ரோகித் சர்மா - கே.எல்.ராகுல் தங்களை நிரூபிக்க வேண்டியுள்ளது. இவர்களை தொடர்ந்து விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் என சிறப்பான டாப் ஆர்டர் உள்ளது. ஆனால் மிடில் ஆர்டரில் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட், மோசமாக விளையாடி வருகிறார். எனவே இன்றைய போட்டியில் தினேஷ் கார்த்திக் களமிறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது.

 ஹூடா நீக்கம்

ஹூடா நீக்கம்

இதே போல, தொடர்ச்சியாக சொதப்பி வரும் தீபக் ஹூடாவும் நீக்கப்படலாம் எனத்தெரிகிறது. சுழற்பந்துவீச்சாளர்களை பொறுத்தவரையில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் யுவேந்திர சாஹல் ஆகிய இருவரும் மீண்டும் ஒருமுறை கூட்டணி அமைக்கவுள்ளனர். 3வது சுழற்பந்துவீச்சாளர் இல்லாமல் தான் களமிறங்கவுள்ளனர்.

தீபக் சஹார் கம்பேக்

தீபக் சஹார் கம்பேக்

வேகப்பந்துவீச்சை பொறுத்தவரையில் தீபக் சஹார் அணிக்குள் எண்ட்ரி கொடுக்கவுள்ளார். புவனேஷ்வர் குமார் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சிறப்பாக பந்துவீசிய போதும், பவர் ப்ளேவில் விக்கெட் வரவில்லை. எனவே தீபக் சஹாரை கொண்டு வருவதன் மூலம் பவர் ப்ளேவில் அதிக விக்கெட்கள் கிடைக்கும்.

ப்ளேயிங் 11 கணிப்பு

ப்ளேயிங் 11 கணிப்பு

ரோகித் சர்மா, கே.எல்.ராகுல், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, தினேஷ் கார்த்திக், அஸ்வின், புவனேஷ்வர் குமார், தீபக் சஹார், யுவேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங்

Story first published: Thursday, September 8, 2022, 15:42 [IST]
Other articles published on Sep 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+