திரும்பி வந்துட்டேனு சொல்லு.. இந்தியாவுக்கு வரும் பெரும் சிக்கல்.. பாகிஸ்தான் போட்டியில் தப்பிக்குமா??
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு இனி பெரும் சிக்கல் உருவாகியுள்ளது.
Recommended Video
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது வரை பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை ( செப்டம்பர் 4) நடைபெறவுள்ள சுப்பர் 4 போட்டியில் மீண்டும் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

ஆசிய கோப்பை தொடர்
முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை 147 ரன்களுக்கு சுருட்டிய, இந்திய அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானும், வெற்றி பாதையை தொடர இந்திய அணி வீரர்களும் முனைப்பு காட்டி வருகின்றனர்.

இந்திய அணிக்கு ஆபத்து
இந்நிலையில் இந்தியாவுக்கு பெரும் ஆபத்து வரவுள்ளது. முதல் போட்டியில் இந்தியாவை தோல்வியின் பாதை வரை இழுத்து சென்றவர் பாகிஸ்தானின் நஷீம் ஷா தான். சாஹீன் அஃப்ரிடி இல்லாததால், அறிமுகமான நசீம் ஷா தனது முதல் ஓவரிலேயே கே.எல்.ராகுலை டக் அவுட்டாக்கி வெளியேறினார். இதன் பின்னர் சூர்யகுமார் யாதவையும் வெளியேற்றினார். எனினும் கடைசி நேரத்தில் அவருக்கு காலில் காயம் ஏற்பட்டு களத்தில் இருந்தே வெளியேறினார்.

நசீம் ஷா எச்சரிக்கை
இவர் தற்போது, முற்றிலும் குணமடைந்து முழு உடற்தகுதியுடன் இருப்பதாக கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், நான் தற்போது முழு ஃபிட்னஸுடன் இருக்கிறேன், இந்திய அணியுடன் தீர்க்கப்படாத ஒரு கணக்கு இருக்கிறது. அந்த பணியை முடிப்பதற்காக வருகிறேன், காத்திருங்கள் என்பது போன்று எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

தரமான கம்பேக்
இதற்கு ஏற்றார் போலவே நேற்று ஹாங்காங் அணியை பந்தாடியுள்ளனர். 193 ரன்களை குவித்த பாகிஸ்தான், ஹாங்காங் அணியை வெறும் 38 ரன்களுக்குள் சுருட்டி அசத்தியது. இதில் நசீம் ஷா 2 ஓவர்களை வீசி 2 விக்கெட்களை கைப்பற்றினார். இதே போல சதாப் கானும் 4 விக்கெட்களை வீழ்த்தி பெரும் புத்துணர்ச்சியுடன் களமிறங்குகிறார்


Click it and Unblock the Notifications