மதவெறியால் சாடப்படும் அர்ஷ்தீப் சிங்.. விராட் கோலி, ஹர்பஜன் சிங் கொந்தளிப்பு.. காரணம் என்ன தெரியுமா?
துபாய்: அர்ஷ்தீப் சிங் காலிஸ்தானி என்று விமர்சனங்கள் குவிந்து வரும் சூழலில் விராட் கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் ஆதரவுக்குரல் எழுப்பியுள்ளனர்.
Recommended Video
ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய அணியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்த தோல்விக்கு இந்திய அணி வீரர் அர்ஷ்தீப் சிங் தான் முக்கிய காரணம் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

என்ன காரணம்
பாகிஸ்தான் அணி கடைசி நேரத்தில் முக்கியமான விக்கெட்களை இழந்துவிட்ட போது, அதிரடி வீரர் ஆசிஃப் அலி மட்டுமே நம்பிக்கையாக இருந்தார். ஆனால் அவரும் முதல் சில பந்துகளிலேயே தூக்கி அடிக்க முயன்று கேட்ச் கொடுக்க, அர்ஷ்திப் சிங் தவறவிட்டார். அவரின் தவறால் ஆசிஃப் அலி 8 பந்துகளில் 16 ரன்களை விளாசி பாகிஸ்தானுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

காலிஸ்தானி?
இதனால் இந்தியாவின் தோல்விக்கு அர்ஷ்தீப் சிங் தான் காரணம் என ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக அர்ஷ்தீப் ஒரு காலிஸ்தானி என்று கூறி மதவெறி சர்ச்சைகளை கிளப்பியுள்ளனர்.மேலும் விக்கிப்பீடியாவிலும் அர்ஷ்தீப் சிங் காலிஸ்தானி என்று மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு விராட் கோலி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விராட் கோலி ஆதரவு
இதுகுறித்து பேசிய விராட் கோலி, நெருக்கடியான சூழல்களில் எப்படிப்பட்ட வீரரும் தவறு செய்யதான் செய்வார்கள். இது பெரிய போட்டி.எனவே தவறு செய்வது சகஜமான ஒன்று தான். சீனியர் வீரர்களிடம் இளம் வீரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அடுத்த முறை இதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்கும்போது உங்களால் கேட்சை பிடிக்க முடியும் என கோலி ஆறுதல் கூறினார்.

ஹர்பஜன் விளாசல்
ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஹர்பஜன் சிங், அர்ஷ்தீப் சிங்கை விமர்சிப்பதை நிறுத்துங்கள். யாருமே வேண்டுமென்றே கேட்சை தவறவிட மாட்டார்கள். நாங்கள் எங்கள் வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறோம். பாகிஸ்தான் சிறப்பாக விளையாடியதுதான். அதற்கென அர்ஷ்தீப் சிங் குறித்தும், இந்திய அணி குறித்தும் விமர்சிப்பவர்களை நினைத்து நான் வெட்கப்படுகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications