Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாக். பேட்டிங் பயிற்சியாளர் யூசூப் உடன் கோலி சந்திப்பு.. 5 நிமிடம் தனியாக பேசினர்.. என்ன நடந்தது?

துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 27ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Recommended Video

Cricket-ல் கூட அரசியலா? Pakista-ன் T20World Cup Jersey ஆல் கடுப்பான ரசிகர்கள்

நேற்று ஐசிசி அகாடமியில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமின் போது இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய வீரர்கள் சந்தித்து பேசினர்.

அப்போது நடைபெற்ற ஒரு சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்ததது. மைதானத்தில் இருந்த விராட் கோலி, பாபர் அசாமை சந்தித்து கை கொடுத்து பேசினார்.

கோலி சந்திப்பு

கோலி சந்திப்பு

ஆனால், அந்த ஒரு சம்பவம் மட்டும் நடக்கவில்லை. விராட் கோலி தற்போது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்துவதில்லை என்று கிரிக்கெட் பார்க்கும் அனைவருக்கும் தெரியும். இதனால், அவர் பழைய ஃபார்ம்க்கு மீண்டு வர பலரும் பல ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். இந்த நிலையில் தான், பாகிஸ்தான் பேட்டிங் பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான முகமது யூசுஃப் உடன் விராட் கோலி தனியாக சந்தித்து பேசினார்.

5 நிமிடம் பேச்சு

5 நிமிடம் பேச்சு

இருவரும் 5 நிமிடம் வரை தனியாக பேசியதாக, இந்த சம்பவத்தை நேரில் பார்த்த பத்திரிகையாளர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். முகமது யூசுஃப், அவருடைய காலத்தில் பாகிஸ்தானின் சிறந்த பேட்ஸ்மேனாக விளங்கினார். டெஸ்ட், ஒருநாள் என இரண்டிலும் அவர் படைத்த சாதனை ஏராளம். கிரிக்கெட் உலகில் அனைவராலும் மதிக்கப்பட்ட நபராக யூசுஃப விளங்கினார்.

பேட்டிங் ஆலோசனை

பேட்டிங் ஆலோசனை

இந்த நிலையில், நாட்டையும் தாண்டி, சில வீரர்கள் மற்ற அணி வீரர்களுக்கு நட்பு ரீதியாக சில ஆலோசனையை கேட்பார்கள், வழங்கவார்கள். தோனியிடம் போட்டி முடிந்ததும் பல எதிரணி வீரர்கள் ஆலோசனை கேட்டதை நாம் பார்த்து இருப்போம். அந்த வகையில், யுசுஃப், கோலியின் சந்திப்பு நிகழ்ந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தவறான விமர்சனம்

தவறான விமர்சனம்

இந்திய அணியில் பல பயிற்சியாளர்கள், ஆலோசகர்கள் இருந்தும் விராட் கோலி ஏன் எதிரணியினரிடம் பேசினார் என்று சில ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், அதில் தவறு ஏதும் இல்லை. சொல்ல போனால், முகமது யூசூஃபே விராட் கோலியை அழைத்து சில ஆலோசனைகளை வழங்கி இருக்கலாம். இதனால் தான் விளையாட்டு நட்பை பாராட்டுமே தவிர, பகையை அல்ல.

Story first published: Thursday, August 25, 2022, 13:55 [IST]
Other articles published on Aug 25, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+