Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே ஒரு சதம் தான்..டி20 கிரிக்கெட்டில் சாதனை மழை பொழிந்த விராட் கோலி.. வியந்துப்பார்க்கும் ரசிகர்கள்

துபாய்: ஆஃப்கானிஸ்தான் அணியுடனான சதத்திற்கு பிறகு புதிய சாதனைகளை விராட் கோலி தனதாக்கியுள்ளார்.

Recommended Video

AsiaCup 2022 ஒரே ஆட்டத்தில் Virat Kohli சாதனை மழை Cricket

ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா - ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின.

இந்த போட்டியில் இந்திய அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 212 /2 ரன்களை குவித்தது. இதன்பின் ஆடிய ஆஃப்கானிஸ்தான் 20 ஓவர்களில் 118/8 ரன்களை மட்டுமே அடித்தனர்.

 கோலியின் சதம்

கோலியின் சதம்

இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தவர் விராட் கோலி தான். சுமார் 1020 நாட்களாக ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்த விராட் கோலி நேற்று ருத்ர தாண்டவம் ஆடினார். மொத்தமாக 61 பந்துகளை சந்தித்த கோலி, 12 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 122 ரன்களை விளாசினார். சர்வதேச கிரிக்கெட்டில் கோலியின் 71வது சதம் இதுவாகும்.

சாதனை பட்டியல்

சாதனை பட்டியல்

இந்நிலையில் இந்த சதத்தின் மூலம் பல பெருமைகளை அவர் பெற்றுள்ளார். 2022ம் ஆண்டு ஆசிய கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியிலில் கோலி தான் முதலிடத்தில் உள்ளார். இதுவரை 5 இன்னிஸ்களில் 276 ரன்களை சேர்த்துளார். ஒரே போட்டியில் அதிக ஸ்கோர் அடித்தவரும் கோலி தான். இதுமட்டுமல்லாமல் இந்த தொடரில் அதிக பவுண்டரிகள், அதிக அரைசதங்கள், அதிக சதங்கள், அதிக சராசரி என அனைத்திலும் விராட் கோலி மட்டுமே முதலிடம் வகிக்கிறார்.

டி20ல் அதிக ரன்கள்

டி20ல் அதிக ரன்கள்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக ரன்களை குவித்தவர்கள் பட்டியலில் மீண்டும் விராட் கோலி முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இதுவரை 96 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர், 3,584 ரன்களை குவித்துள்ளார். இதில் 32 அரைசதங்களும், ஒரு சதமும் அடங்கும். இதுமட்டுமல்லாமல் சர்வதேச கிரிக்கெட்டில் 24,000 ரன்களை கோலி கடந்துள்ளார்.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணிக்காக தொடர்ச்சியாக அதிக ரன்களை அடித்து வருபவர் கோலியே ஆகும். கடந்த 2012, 2016, 2022 என மூன்று ஆண்டுகளிலும் விராட் கோலி தான் இந்தியாவுக்காக அதிக ரன்களை அடித்துள்ளார். இதுமட்டுமல்லாமல் ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக முறை ஆட்டநாயகன் விருது பெற்றதும் கோலியே ஆகும்.

Story first published: Friday, September 9, 2022, 9:57 [IST]
Other articles published on Sep 9, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+