Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“எனக்கே ஸ்கெட்ச்சா.. “ பாகிஸ்தான் போட்டியில் "பார்வையாலே" செய்த சம்பவம்.. அதுதான் கிங் கோலி!

துபாய்: பாகிஸ்தான் அணியுடனான போட்டியின் போது முகமது ரிஸ்வான் போட்ட திட்டத்தை விராட் கோலி கண்டுபிடித்த வீடியோ இணையத்தை கலக்கி வருகிறது.

Recommended Video

AsiaCup 2022 Pakistan அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு முக்கியவீரர் விலகும் நிலை? *Cricket

ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டியை நெருங்கியுள்ளது.

பாகிஸ்தான் ஆட்டம்

பாகிஸ்தான் ஆட்டம்

பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற போதும், விராட் கோலி தான் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் என்பதில் சந்தேகமே இல்லை. முதல் போட்டியில் 34 பந்துகளில் 35 ரன்களை அடித்த விராட் கோலி, பலமுறை அதிர்ஷ்டவசமாக கேட்ச்களில் இருந்து தப்பினார். ஆனால் சூப்பர் 4 போட்டியில் பவுலர்களுக்கு எந்தவித இடமும் கொடுக்கவே இல்லை.

அதிரடி ஆட்டம்

அதிரடி ஆட்டம்

முதல் பந்து முதலே அதிரடியாக விளையாடிய அவர், 44 பந்துகளில் 60 ரன்களை விளாசினார். ஒருமுறை கூட விராட் கோலியை அவுட்டாக்கும் சிறிய வாய்ப்பு கூட அவர்களுக்கு கிடைக்கவில்லை. அந்த அளவிற்கு ஆட்டத்தையும், பாகிஸ்தானின் பவுலிங்கையும் கணித்து விளையாடினார்.

சுவாரஸ்யமான வீடியோ

சுவாரஸ்யமான வீடியோ

இந்நிலையில் கோலி கவனம் செலுத்திய முக்கிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஆட்டத்தின் 8வது ஓவரின் போது முகமது நவாஸின் பந்துவீச்சை விராட் கோலி எதிர்கொண்டார். அப்போது, கோலி பந்துவீச்சாளரை கவனிக்க, அவருக்கு பின்னால் நின்றிருந்த விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான், ஆஃப் சைட் திசையில் ஒரு ஃபீல்டரை நகர்த்தி நிறுத்தினார்.

கோலிக்கே ஸ்கெட்ச்

கோலிக்கே ஸ்கெட்ச்

இதை கோலி கவனிக்கவில்லை என நினைத்துக்கொண்டு பவுலரிடம் ஆஃப்சைடில் பந்துவீச கூறினார். ஆனால் அதனை தனது ஓர கண்ணால் சாதூர்யமாக கவனித்தார் கோலி. இதனால் பந்துவீச்சாளர் எந்த லெந்த்-ல் போடுகிறார் என்பதை சரியாக கணித்து அடித்தார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மேலும், கோலிக்கே ஸ்கெட்ச்சா என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

Story first published: Tuesday, September 6, 2022, 14:25 [IST]
Other articles published on Sep 6, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+