Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தோனி குறித்து திடீரென பதிவிட்ட விராட் கோலி .. ரோகித் மீது மறைமுக குற்றச்சாட்டு?.. ரசிகர்கள் சந்தேகம்

துபாய்: இந்திய வீரர் விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புதிய புகைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Recommended Video

Asia Cup 2022: Virat Kohli-யின் வெறித்தனமான Net Practice

6 நாடுகள் மோதவுள்ள ஆசிய கோப்பை தொடர் நாளை முதல் ( ஆகஸ்ட் 27 ) ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது.

இந்த தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி துபாயில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

கோலி மீதான எதிர்பார்ப்பு

கோலி மீதான எதிர்பார்ப்பு

இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நீண்ட நாட்களுக்கு பின் அணிக்கு திரும்பியுள்ளதால் அவரின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஃபார்ம் அவுட் காரணமாக ஓய்வில் இருந்த கோலி, ஆசிய கோப்பை தொடருக்கு நேரடியாக வந்துள்ளார். இதில் சிறப்பாக விளையாடினால் மட்டுமே இனி டி20 அணியில் வாய்ப்பு என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கோலியின் பதிவு

கோலியின் பதிவு

இந்நிலையில் விராட் கோலி போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது. தோனியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்தது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ள கோலி, " தோனியின் மிகவும் நம்பிக்கையான துணைக்கேப்டனாக பணியாற்றிய காலங்கள் தான் எனது கிரிக்கெட் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் ஆகும்.

மிகவும் ஸ்பெஷல்

மிகவும் ஸ்பெஷல்

தோனியும், நானும் அமைத்த பார்ட்னர்ஷிப்கள் தான் என்றுமே எனக்கு மிக ஸ்பெஷலான ஒன்று என விராட் கோலி குறிப்பிட்டுள்ளார். மேலும் 7 + 18 என இருவரின் ஜெர்ஸி நம்பர்களையும் பதிவிட்டு நெகிழ்ச்சியடைந்துள்ளார். தோனி மற்றும் விராட் கோலி அமைத்த பார்ட்னர்ஷிப்கள் அதிகப்படியான வெற்றிகளை தேடி தந்துள்ளது. இதனால் ரசிகர்கள் அதனை நினைவுக்கூர்ந்து வருகின்றனர்.

ரசிகர்கள் சந்தேகம்

ரசிகர்கள் சந்தேகம்

ஆசிய கோப்பை நடைபெறும் சூழலில் விராட் கோலி ஏன் சம்மந்தமே இல்லாமல் தோனியுடன் மகிழ்ச்சியாக இருந்தேன் என பதிவிட்டார் என்பது தான் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உள்ள அணியில் விராட் கோலிக்கு மகிழ்ச்சி இல்லையா? அவருக்கு யாரேனும் அழுத்தம் தருகிறார்களா? அதனை தான் மறைமுகமாக கூறியுள்ளாரா என்ற சந்தேகங்களை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

Story first published: Friday, August 26, 2022, 11:24 [IST]
Other articles published on Aug 26, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+