Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி ஒரு வெற்றியா..?? விராட் கோலியின் சதம்.. புவனேஷ்வரின் பெஸ்ட்.. ஆஃப்கானை கதறவிட்ட இந்திய அணி!

துபாய்: ஆஃப்கானிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய அணி ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

Recommended Video

IND vs AFG Virat Kohli-ன் அசுரத்தனமான ஆட்டம்! அபார சதம் *Cricket

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தனது கடைசி போட்டியாக ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்கொண்டது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, இந்திய அணி அபார பேட்டிங்கை வெளிப்படுத்தியது.

சிறப்பான ஓப்பனிங்

சிறப்பான ஓப்பனிங்

ஓப்பனிங் வீரர்கள் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் அதிரடி காட்ட இந்திய அணியின் ஸ்கோர் மலமலவென உயர்ந்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து முதல் விக்கெட்டிற்கு 119 ரன்களை சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் 41 பந்துகளில் 62 ரன்களை விளாசினார். இதன் பின்னர் பொறுப்பை ஏற்றுக்கொண்ட விராட் கோலி ஆஃப்கான் பந்துவீச்சாளர்களை விழிப்பிதுங்க வைத்தார்.

டி20ல் முதல் சதம்

டி20ல் முதல் சதம்

யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக விளையாடிய விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசினார். 1020 நாட்களாக ஒரு சதம் கூட அடிக்காமல் இருந்த அவரின் காத்திருப்பு முடிவுக்கு வந்தது. மொத்தமாக 61 பந்துகளை சந்தித்த விராட் கோலி 12 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 122 ரன்களை விளாசினார். கடைசி நேரத்தில் ரிஷப் பண்ட் 20 ரன்கள் அடிக்க 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 212 ரன்களை விளாசினர்.

 புவியின் பெஸ்ட்

புவியின் பெஸ்ட்

இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ஓப்பனிங்கே அதிர்ச்சி கொடுத்தார் புவனேஷ்வர் குமார். அவர் வீசிய முதல் ஓவரிலேயே ஆஃப்கானிஸ்தான் அணியின் ஓப்பனிங் வீரர்கள் ஹஸ்ராதுல்லா மற்றும் ரஹ்மானுல்லா குர்பாஸ் ஆகிய இருவருமே டக் அவுட்டாகி வெளியேறினர்.

சரிந்த ஆஃப்கானிஸ்தான்

சரிந்த ஆஃப்கானிஸ்தான்

இதன்பின்னர் வந்த வீரர்களும் புவனேஷ்வர் குமாரின் வேகத்தில் இருந்து தப்பவில்லை. அவரின் பவுலிங்கில் சிக்கி கரீம் ஜனாத் (2), நஜிபுல்லா ஜாட்ரான் (0), அஸ்மாதுல்லா (1) என அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் அந்த அணி 21 ரன்களுக்கெல்லாம் 6 விக்கெட்களை இழந்து பரிதாப நிலைக்கு சென்றது. நம்பிக்கை நாயகனாக பார்க்கப்பட்ட ரஷித் கான் 15 ரன்களை அடித்தார்.

அசத்தல் வெற்றி

அசத்தல் வெற்றி

மறுமுணையில் தூண் போன்று நிலைத்து நின்ற இப்ராஹீம் ஜாட்ரான் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால் இதுவும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. முஜீப் உர் ரஹ்மான் 18 ரன்களுக்கு அட்டமிழந்தார். கடைசி வரை போராடிய இப்ராஹீம் ஜட்ரான் 46 இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் ஆஃப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 111 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 101 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.

Story first published: Thursday, September 8, 2022, 23:02 [IST]
Other articles published on Sep 8, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+