Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“நிறைய பேரிடம் என் நம்பர் உள்ளது.. ஆனால் தோனி மட்டுமே அழைத்தார்”.. விராட் கோலி நெகிழ்ச்சி பதிவு!

துபாய்: தோனி மட்டுமே தனக்கு கஷ்ட காலத்தில் உடன் இருந்ததாக விராட் கோலி கூறியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

IND vs PAK போட்டி தோல்வி குறித்து Rohit Sharma வேதனை *Cricket

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின.

இந்த போட்டியில் பாகிஸ்தானிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

விராட் கோலியின் கம்பேக்

விராட் கோலியின் கம்பேக்

இந்திய அணி தோற்ற போதும், ரசிகர்கள் அனைவர்களுக்கும் விராட் கோலியின் கம்பேக் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியில் 37 ரன்களை மட்டுமே அடித்திருந்த அவர், அடுத்த 2 போட்டிகளிலும் தொடர்ச்சியாக அரைசதம் அடித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். இதனால் இந்திய அணிக்கு புதிய புத்துணர்ச்சி கிடைத்துள்ளது.

 கோலி சந்தித்த சோகம்

கோலி சந்தித்த சோகம்

இந்நிலையில் ஃபார்முக்கு வந்த மகிழ்ச்சியை விட, சோகத்தை தான் கோலி வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "நான் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய போது எனக்கு ஆறுதல் கூற மெசேஜ் அனுப்பியது தோனி மட்டும் தான். என்னுடைய செல்போன் நம்பர் நிறைய பேரிடம் உள்ளது. ஆனால் யாருமே எனக்காக வரவில்லை. தோனி மட்டுமே எப்போதும் ஆதரவு கொடுப்பார்.

அதிக மரியாதை

அதிக மரியாதை

தோனி மீது நான் கொண்டுள்ள மரியாதையும், பிணைப்பும் மிகவும் உண்மையான ஒன்று. இதே போல தோனியும் என்மீது மிகுந்த மரியாதையும், அன்பும் வைத்துள்ளார். எனது ஃபார்ம் மீது அதீத நம்பிக்கையை அவர் வைத்திருந்தார். அவருடன் என்றுமே அதே நட்புடன் இருப்பேன் என்பது போன்று விராட் கோலி பேசியுள்ளார்.

அக்கறை தான் முக்கியம்

அக்கறை தான் முக்கியம்

விளையாட்டில் அதை மாற்ற வேண்டும், இதை மாற்றிக்கொள்ள வேண்டும் என பலரும் எனக்காக அறிவுரைகளையும், ஐடியாக்களையும் கொடுத்துள்ளனர். ஆனால் எனக்கு அந்த சமயத்தில் அது முக்கியம் இல்லை. என் மீது அக்கரை கொண்டு, தொலைபேசியில் தனிப்பட்ட முறையில் பேசியிருப்பதே முக்கியம். அதனை தோனி மட்டும் தான் செய்தார் என கோலி கூறியுள்ளார்.இதனை கேட்ட ரசிகர்கள் இருவரின் நட்பை பார்த்து நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Story first published: Monday, September 5, 2022, 17:48 [IST]
Other articles published on Sep 5, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+