Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“பாகிஸ்தான் ஜெயிக்க என்ன வழி?”.. ஆசிய கோப்பை இறுதிப்போட்டி.. பாகிஸ்தானுக்கு வாசீம் அக்ரம் அறிவுரை!

துபாய்: இலங்கை அணியை எதிர்கொள்வதற்காக பாகிஸ்தான் அணிக்கு முன்னாள் வீரர் வசீம் அக்ரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

Asia Cup 2022 Final: PAK vs SL-வின் Predicted Playing 11 | Aanee's Appeal | *Cricket

துபாயில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

இந்தியா உட்பட மொத்தம் 6 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளன.

ஆசிய கோப்பை

ஆசிய கோப்பை

இரு அணிகளும் மோதும் இந்த இறுதிப்போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. சூப்பர் 4 சுற்றில் இரு அணிகளும் மோதிய போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது. இதனால் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணி பழிதீர்த்துக்கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வசீம் அக்ரம் ஐடியா

வசீம் அக்ரம் ஐடியா

இந்நிலையில் இந்த முறை இலங்கையை எதிர்கொள்ள பாகிஸ்தான் முன்னாள் வீரர் வசீம் அக்ரம் ஆலோசனை கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் செயல்பாடு மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனால் இலங்கை அணியுடனான போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரு குறிக்கோள் இல்லாமல் இருந்ததை நான் உணர்ந்தேன். பேட்டிங்கில் சில தவறுகளை செய்தனர்.

மிடில் ஆர்டர் சொதப்பல்

மிடில் ஆர்டர் சொதப்பல்

பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் அனுபவமில்லாத வீரர்களுடன் பலவீனமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கடந்த இலங்கை அணியுடனான போட்டியில் ரிஸ்வான் அவுட்டானவுடன் மிடில் ஆர்டர் தான் காப்பாற்றியது. இறுதிப்போட்டியில் பிட்ச் நன்றாக இருப்பதால், நிச்சயம் நல்ல கம்பேக் கொடுப்பார்கள் என நம்புகிறேன். ஆனால் இலங்கை அணியும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என வசீம் அக்ரம் கூறியுள்ளார்.

வெற்றி யாருக்கு

வெற்றி யாருக்கு

துபாய் மைதானத்தை பொறுத்தவரையில் இன்றைய போட்டியிலும் டாஸ் வெற்றி பெறும் அணி தான் போட்டியையும் கைப்பற்றும் நிலை உள்ளது. தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பையிலும் டாஸ் வென்ற அணிகள் தான் வெற்றி பெற்று வருகின்றன. எனவே இன்று அதனை பாகிஸ்தான் மாற்றி அமைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Story first published: Sunday, September 11, 2022, 17:00 [IST]
Other articles published on Sep 11, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+