Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்தியாவின் துருப்பு சீட்டு.. பாகிஸ்தானுக்கு எமனாக விளங்கும் யுவேந்திர சாஹல்.. என்ன காரணம் தெரியுமா?

துபாய்: பாகிஸ்தான் அணியுடனான போட்டியில் இந்திய அணியின் துருப்பு சீட்டாக இளம் வீரர் ஒருவர் தான் இருக்கப்போகிறார்.

Recommended Video

IND vs PAK இந்திய அணி பந்துவீச்சில் மிரட்டல் சுருண்ட Pakistan

ஆசிய கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போட்டி இன்று இரவு நடைபெறுகிறது.

துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

பாகிஸ்தான் போட்டி

பாகிஸ்தான் போட்டி

கடந்த டி20 உலகக்கோப்பை தொடரிலும் இதே மைதானத்தில் தான் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் இந்தியா 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. எனவே இன்று இதே துபாய் களத்தில் இந்தியா பழிதீர்ப்பதற்காக காத்துள்ளது. இதற்காக ப்ளேயிங் 11ல் நல்ல ஃபார்மில் இருக்கும் வீரர்களாக ரோகித் தேர்வு செய்து வருகிறார்.

முக்கிய வீரர்

முக்கிய வீரர்

இந்நிலையில் இன்றைய போட்டியில் இந்தியாவின் துருப்பு சீட்டாக யுவேந்திர சாஹல் மட்டுமே இருக்கப்போகிறார். போட்டி நடைபெறும் துபாய் மைதானம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஒன்றாகும். குறிப்பாக ஆட்டத்தின் மிடில் ஓவர்களில் பந்தில் நல்ல டேர்ன் இருக்கும் என்பதால் இரண்டு அணிகளுமே 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.

அட்டகாசமான ரெக்கார்ட்

அட்டகாசமான ரெக்கார்ட்

அந்தவகையில் இந்திய அணியில் யுவேந்திர சாஹல் களமிறங்குவது உறுதியாகியுள்ளது. ஏனென்றால் அமீரகத்தில் அவர் அட்டகாச ரெக்கார்டை வைத்துள்ளார். இதுவரை ஐக்கிய அரபு அமீரகத்தில் 28 போட்டிகளில் விளையாடியுள்ள சாஹல் 42 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார். அவரின் எகானமி வெறும் 6.49 ரன்கள் மட்டுமே. இவரின் பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு எதிரணி பேட்ஸ்மேன்கள் திணறியுள்ளனர்.

அஸ்வின் கூடுதல் பலம்

அஸ்வின் கூடுதல் பலம்

யுவேந்திர சாஹல் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். இவருடன் ரவிச்சந்திரன் அஸ்வினும் களமிறங்க வாய்ப்புள்ளது. கடந்தாண்டு டி20 உலகக்கோப்பையில் அஸ்வின் பல வேரியேஷன்களில் விக்கெட்களை கைப்பற்றியிருந்தார். எனவே இவர்கள் இருவரும் இன்று பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

Story first published: Sunday, August 28, 2022, 18:21 [IST]
Other articles published on Aug 28, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+