Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பை - விராட் கோலி சாதனையை முறியடித்த பாபர் அசாம்.. பாக் போட்டியில் பதிலடி தருவாரா கிங்?

லாகூர் : கிரிக்கெட் உலகின் பல ரெகார்டுகளை விராட் கோலி உடைத்து வந்தார். இந்த நிலையில் விராட் கோலி படைத்த ரெக்கார்டை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் உடைத்து வருவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.

பாகிஸ்தான் அணியின் 101 இன்னிங்ஸில் விளையாடி 19 சதம் அடித்த வீரர் என்ற பெருமையை படைத்திருக்கிறார். இதன் மூலம் அந்த நாட்டுக்காக அதிக ஒரு நாள் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் பாபர் அசாம் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறார்.

Asia cup 2023 - Babar azam breaks virat kohli record as captain in odi

முதல் இடத்தில் சையது அன்வர் இருக்கிறார். இந்த நிலையில் பேட்ஸ்மேன் ஆக மட்டுமல்லாமல் பாபர் அசாம் கேப்டனாகவும் அசத்தி வருகிறார். இந்த நிலையில் சூப்பர் ஃபோர் சுற்றில் வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் அணி விளையாடியது. இதில் பாபர் அசாம் 22 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே சேர்த்தார். எனினும் இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட்டில் மகத்தான சாதனையை பாபர் அஸாம் படைத்திருக்கிறார்.

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 2000 ரன்கள் எடுத்த கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி 36 இன்னிங்ஸில் படைத்திருந்தார். இந்த நிலையில் தற்போது பாபர் அசாம் 31 இன்னிங்சில் கேப்டனாக 2000 ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். கோலி 36 இன்னிங்சிலும், ஏபி டிவில்லியர்ஸ் 41 இன்னிங்சிலும் மைக்கேல் கிளார்க் 46 இன்னிங்ஸிலும் இந்த சாதனையை படைத்திருந்தார்கள். 2019 ஆம் ஆண்டு பாபர் அசாம்,பாகிஸ்தான் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று தற்போது உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேற்றிருக்கிறார்.

இந்த நிலையில் லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி 4 ரன்களில் ஆட்டம் இழ்ந்த நிலையில் தற்போது பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய உத்வேகத்தில் விராட் கோலி பயிற்சி செய்து வருகிறார்.மேலும் விராட் கோலி பாகிஸ்தான் வீரர்களிடம் நட்பாக இருப்பதை சிலர் தவறாக சித்தரித்து அவருக்கு எதிராக பிரச்சாரத்தை செய்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விராட் கோலி சூப்பர் போர் சுற்றில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Thursday, September 7, 2023, 17:22 [IST]
Other articles published on Sep 7, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+