For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதான் இந்திய அணியின் வீக்னஸ்.. பாக். என்ன செய்யும்.. கனேரியா கடும் விமர்சனம்

லாகூர் : இந்திய அணியின் பலவீனத்தை பற்றி கூறி இருக்கும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் டானிஷ் கனேரியா, நேபாள அணிக்கு எதிராகக் கூட இந்திய அணி சரியாக செயல்படவில்லை என சுட்டிக் காட்டி இருக்கிறார்.

மேலும், நேபாள அணியே இப்படி என்றால் பாகிஸ்தான் அணி என்ன செய்யும் என யோசித்துப் பாருங்கள் என கூறி கடும் விமர்சனத்தை முன் வைத்து இருக்கிறார்.

Asia Cup 2023 : Danish Kaneria points out Indias bowling woes

2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் குரூப் சுற்றில் இந்திய அணி பாகிஸ்தான் மற்றும் நேபாள அணிகளை சந்தித்தது. இதில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 266 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அது இந்திய அணியின் பேட்டிங்கில் இருக்கும் தவறுகளை சுட்டிக் காட்டியது.

அது இந்திய அணியின் பேட்டிங்கில் இருக்கும் தவறுகளை சுட்டிக் காட்டியது.

அடுத்து நேபாள அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பந்து வீசி 230 ரன்களை விட்டுக் கொடுத்தது. அது இந்திய அணியின் பந்துவீச்சு பலவீனத்தை காட்டியது. கத்துக்குட்டி அணியான நேபாளத்தை 150 ரன்களுக்குள் சுருக்கி இருக்க வேண்டும் என கூறி இருக்கிறார் கனேரியா.

அடுத்து இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக சூப்பர் 4 சுற்றில் மோத உள்ளது. அந்தப் போட்டியில் நேபாள அணியைக் கூட கட்டுப்படுத்த முடியாத இந்திய அணியின் பந்துவீச்சை பாகிஸ்தான் அணி பந்தாடும் என கூறி இருக்கிறார் கனேரியா.

"நேபாளம் 230 ரன்கள் குவிக்கிறது என்றால், பாகிஸ்தான் என்ன செய்யும் என கற்பனை செய்து பாருங்கள். தேர்வுக் குழுவினர் இந்திய அணியின் பந்துவீச்சை பற்றி கண்டு கொள்ளவில்லை." என அவர் கூறி இருக்கிறார்.

Story first published: Thursday, September 7, 2023, 9:13 [IST]
Other articles published on Sep 7, 2023
English summary
Asia Cup 2023 : Danish Kaneria points out India's bowling woes ahead of India - Pakistan clash in Super 4.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+