Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விசில் போடு..! இந்தியா vs பாகிஸ்தான் மோதல்.. ஆசிய கோப்பை 2023 குறித்து வெளியான அட்டகாச தகவல்!

மும்பை: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் குறித்து ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

2023ம் ஆண்டுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டங்கள் தான் கடந்த சில மாதங்களாக நடந்து வருகின்றன.

50 ஓவர் உலகக்கோப்பை இந்தாண்டு வரவிருப்பதால், ஆசிய கோப்பையையும் 50 ஓவர் கிரிக்கெட் தொடராகவே நடத்தப்படவுள்ளன. இதற்கான போட்டி வடிவம் மற்றும் குரூப்களையும் தற்போது வெளியிட்டுள்ளனர்.

 புதிய அறிவிப்பு

புதிய அறிவிப்பு

அதன்படி மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரை இரு பிரிவாக பிரித்துள்ளனர். இதில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஒரே குரூப்பில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. தகுதிச்சுற்று போட்டிகளில் தேர்வாகும் அணி 3வதாக இந்த குரூப்பில் இணைக்கப்படும். கடந்தாண்டும் இந்தியா - பாகிஸ்தான் ஒரே குரூப்பில் இருந்ததால் இந்தாண்டு வெவ்வேறு குரூப்பில் போடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அப்படி நடந்திருந்தால் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியிருந்தால் மட்டுமே இரு அணிகளும் மோதி இருக்கும்.

2வது பிரிவு

2வது பிரிவு

இதே போல மற்றொரு குரூப்பில் வங்கதேசம், இலங்கை அணிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. தகுதிச்சுற்றில் முன்னேறும் அணி 3வதாக சேர்க்கப்படும். இதே போல போட்டி வடிவமும் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிய கோப்பை தொடரில் மொத்தம் 13 போட்டிகள் நடைபெறவுள்ளது. இதில் 6 போட்டிகள் லீக் சுற்றிலும் 6 போட்டிகள் சூப்பர் 4 சுற்றாகவும் நடத்தப்படும் என அறிவிப்பு.

 போட்டியின் இடம்?

போட்டியின் இடம்?

இதெல்லாம் அறிவித்த போதும், ஆசிய கோப்பை தொடர் எந்த நாட்டில் நடக்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்தாண்டு ஆசிய கோப்பையை நடத்தும் உரிமை பாகிஸ்தானிடமே உள்ளது. ஆனால் அரசியல் காரணங்களால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும் வேறு நாட்டிற்கு தொடர் மாற்றப்படும் எனவும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய் ஷா கூறியிருந்தார்.

பாகிஸ்தானின் பிடிவாதம்

பாகிஸ்தானின் பிடிவாதம்

எனினும் இந்த விவகாரத்தில் பாகிஸ்தானும் விடாப்பிடியாக உள்ளது. அதாவது ஆசிய கோப்பைக்காக பாகிஸ்தானுக்கு இந்திய வீரர்கள் வரவில்லை என்றால் இந்தியாவில் நடக்கப்போகும் உலகக்கோப்பை தொடருக்கு பாகிஸ்தான் செல்லாது என தடாலடியாக அறிவித்தது. எனவே இதில் ஐசிசி-ன் முடிவை எதிர்நோக்கி இரு நாட்டு ரசிகர்களும் காத்துள்ளனர்.

Story first published: Thursday, January 5, 2023, 15:26 [IST]
Other articles published on Jan 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+