போச்சா போச்சா.. செமயாக கலாய்த்த பாண்டியா.. நொந்து போன அம்பயர்!
பல்லேகலே : நேபாள அணிக்கு எதிரான 2023 ஆசிய கோப்பை போட்டியில், இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா, அம்பயரை கலாய்த்த சம்பவம் வேகமாக பரவி வருகிறது.
ஆசிய கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. அங்கே தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டிகளை நடத்துவதில் சிரமம் உள்ளது.

இந்தியா - நேபாளம் : இந்த நிலையில் இந்தியா - நேபாள அணிகள் மோதிய குரூப் சுற்றுப் போட்டி பல்லேகலேவில் நடைபெற்றது. அந்த மைதானத்தில் முன்னதாக நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியிலும் மழை குறுக்கிட்டு போட்டி பாதியில் கைவிடப்பட்டது.
ஏமாற்றிய மழை : அதே போல, இந்தப் போட்டியிலும் மழை பல முறை வருவது போல வந்து பின் ஏமாற்றியது. முதலில் 30 வது ஓவர் முடிவில் மழை தூறியது. அப்போது போட்டி அம்பயர்கள் உடனடியாக மைதானத்தை மூடுமாறு ஊழியர்களுக்கு சிக்னல் காட்டினர். ஆனால், மழை வரவில்லை.
https://twitter.com/NihariVsKorma/status/1698677373556969969
அடக்க முடியாமல் சிரித்த பாண்டியா : மீண்டும் 35 வது ஓவரின் முடிவில் இதே சம்பவம் நடந்தது. அம்பயர்கள் சிக்னல் காட்டிய உடன், ஊழியர்கள் மைதானத்தை மூட தயார் ஆகும் போது மழை நின்றது. இதைக் கண்ட பாண்டியா, அடக்க முடியாமல் சிரித்து அம்பயரை கிண்டல் செய்தார்.
நொந்து போன அம்பயர் : மழை வராமல் போனதால் குழப்பத்தில் இருந்த அம்பயர், பாண்டியாவின் கேலியால் மேலும் நொந்து போனார். "நான் என்னப்பா பண்ணுவேன்?" என்பது போல அவர் பாண்டியாவிடம் காட்டிய ரியாக்ஷன் தான் இதில் சிறப்பு.
டிஎல்எஸ் இலக்கு : இரண்டு முறை ஏமாற்றிய மழை அடுத்து நேபாள் அணியின் பேட்டிங் முடிந்த பின், இந்திய அணி பேட்டிங் தொடங்கிய உடன் மீண்டும் வந்து போட்டியை தடை செய்தது. பின் இந்திய அணிக்கு 23 ஓவரில் 145 ரன்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


Click it and Unblock the Notifications