Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாகிஸ்தான் எதிரான போட்டி ரத்து.. சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா தகுதி பெற என்ன வழி?மீண்டும் வரும் மழை

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு முதல் அணியாக பாகிஸ்தான் தகுதி பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் மோதிய ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது.

இதன் காரணமாக இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கிடைத்து இருக்கிறது. தற்போது பாகிஸ்தான அணி தன்னுடைய 2 ஆட்டத்திலும் விளையாடிவிட்டது.

Asia cup 2023 - how india will qualify for super 4 if match against nepal is abandoned

இதன் மூலம் மூன்று புள்ளிகள் பெற்று பாகிஸ்தான் தற்போது சூப்பர் போர் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஆனால் பாகிஸ்தான் உடன் இந்தியா விளையாடிய ஆட்டம் மழையால் ரத்தானதால் தற்போது ஒரு புள்ளிகள் மட்டுமே கிடைத்திருக்கிறது. இதனால் இந்தியா சூப்பர் போர் சுற்றுக்கு தகுதி பெறுமா என ரசிகர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். இந்தியா சூப்பர் ஃபோர் சுற்றுக்கு செல்ல என்ன வழி என்பதை தற்போது பார்க்கலாம்.

இந்தியா தற்போது வரும் திங்கட்கிழமை நேபாள் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியும் இதே பாலக்கல்லே மைதானத்தில் தான் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற்றால் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதி பெற்று விடும். நேபாள அணிக்கு எதிரான ஆட்டம் என்பதால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு 100 சதவீதம் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

ஆனால் இப்போதுதான் ஒரு விஷயமே இருக்கிறது. திங்கட்கிழமை மீண்டும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அன்றைய ஆட்டமும் மழையால் தடை பட்டால் யார் சூப்பர் போர் சுற்றுக்கு தகுதி பெறுவார்கள் என சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை அந்த ஆட்டம் தடை பட்டால் மீண்டும் இந்தியாவுக்கு ஒரு புள்ளிகள் கிடைக்கும்.

அதை வைத்து இந்தியா சூப்பர் ஃபோர் சுற்றுக்கு எளிதில் முன்னேறிவிடும். ஒருவேளை மழை காரணமாக டக்வொர்த் விதி ஏதேனும் சதி செய்தால் நேபாள அணி வெற்றி பெறும் வகையில் முடிவு மாறினால் நேபாள் அணி சூப்பர் ஃபோர் சுற்றுக்கு சென்று விடும். ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என நாம் 100 சதவீதம் நம்பலாம்.

Story first published: Sunday, September 3, 2023, 6:15 [IST]
Other articles published on Sep 3, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+