For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆசிய கோப்பை 2023 LIVE: வங்கதேச அணியிடம் வீழ்ந்த இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று தொடங்கி கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகள் முன்னேறியுள்ளன. இதன் கடைசி ஆட்டத்தில் இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதுகின்றன.

 Asia cup 2023 - India vs Bangladesh - Match LIVE Score News Updates and Highlights in Tamil

Sep 15, 2023, 11:06 pm IST

வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது

Sep 15, 2023, 10:58 pm IST

இந்திய அணியின் வெற்றிக்கு கடைசி 11 பந்துகளில் 17 ரன்கள் தேவையாக உள்ளது. 48.1 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 249 ரன்கள் சேர்த்துள்ளது

Sep 15, 2023, 10:25 pm IST

இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 133 பந்துகளில் 121 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 209 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது

Sep 15, 2023, 10:02 pm IST

சிறப்பாக விளையாடிய தொடக்க வீரர் சுப்மன் கில் 117 பந்துகளில் சதம் விளாசி அசத்தியுள்ளார். இவர் அவரின் 5வது ஒருநாள் சதமாகும்

Sep 15, 2023, 9:59 pm IST

இந்திய அணியின் ஜடேஜா 7 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், இந்திய அணி 38 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Sep 15, 2023, 9:27 pm IST

31 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 133 ரன்கள் சேர்த்துள்ளது. சுப்மன் கில் 71 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 23 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர்

Sep 15, 2023, 8:59 pm IST

இந்திய அணியில் இளம் வீரர் இஷான் கிஷன் 15 பந்துகளில் 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்

Sep 15, 2023, 8:39 pm IST

இந்திய அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் வீரர் கேஎல் ராகுல் 39 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்

Sep 15, 2023, 8:08 pm IST

11 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 46 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Sep 15, 2023, 7:31 pm IST

2.4 ஓவர்களில் இந்திய அணி 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது

Sep 15, 2023, 6:44 pm IST

50 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 8 விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் குவித்தது. இந்திய அணிக்கு 266 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம். வங்கதேச அணியின் ஷகிப் அல் ஹசன் 80 ரன்கள் குவித்தார். இந்திய அணியில் ஷர்துல் 3, ஷமி 2 விக்கெட்கள் வீழ்த்தினர்.

Sep 15, 2023, 6:29 pm IST

47.2வது ஓவரில் 8வது விக்கெட்டை இழந்தது வங்கதேசம். பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் நஸும் அஹ்மத் 44 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். வங்கதேசம் 8 விக்கெட் இழந்து 238 ரன்கள் எடுத்துள்ளது.

Sep 15, 2023, 6:18 pm IST

45 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 7 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்துள்ளது. மஹேதி ஹாசன் 13, நஸும் அஹ்மத் 35 ரன்கள் எடுத்து ஆடி வருகின்றனர்.

Sep 15, 2023, 6:09 pm IST

7 விக்கெட் இழந்த நிலையிலும் ஓவருக்கு 5 ரன்கள் என்ற ரன் ரேட்டில் வங்கதேசம் ரன் குவித்து வருகிறது.

Sep 15, 2023, 6:02 pm IST

42 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Sep 15, 2023, 5:41 pm IST

34.2 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது

Sep 15, 2023, 5:22 pm IST

32 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. ஷகிப் அல் ஹசன் 78 ரன்களும், ஹிர்தாய் 39 ரன்களும் சேர்த்து விளையாடி வருகின்றனர்

Sep 15, 2023, 4:55 pm IST

25 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது

Sep 15, 2023, 4:16 pm IST

வங்கதேச அணி 14 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 59 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது. வங்கதேச அணியின் மெஹதி ஹசன் மிராஸ் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்

Sep 15, 2023, 3:39 pm IST

வங்கதேச அணியின் அனாமுல் ஹக் 11 பந்துகளில் 4 ரன்கள் சேர்த்து ஷர்துல் தாக்கூர் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் வங்கதேசம் அணி 28 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது

Sep 15, 2023, 3:22 pm IST

வங்கதேச அணியின் லிட்டன் தாஸ் டக் அவுட்டிலும், தன்ஜித் ஹசன் 13 ரன்களிலும் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் வங்கதேச அணி 15 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது

Sep 15, 2023, 2:46 pm IST

வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இஉந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்

Story first published: Friday, September 15, 2023, 13:55 [IST]
Other articles published on Sep 15, 2023
English summary
Asia cup 2023 [ஆசிய கோப்பை 2023] LIVE News Updates in Tamil: இந்தியா, வங்கதேசம் மோதல்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+