ஆசிய கோப்பை 2023 LIVE: 228 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
ஆசிய கோப்பை கரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் இன்று பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் நாளையும் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்
பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில வீழ்த்தியது இந்தியா
குல்தீப் யாதவ் பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் ஃபகர் ஜமான் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்
ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சில் பாகிஸ்தான் நட்சத்திர வீரர் முகமது ரிஸ்வான் 2 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
20 ஓவர் முடிவில் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி பாகிஸ்தானின் வெற்றி இலக்கு 107/0, 121/1, 139/2, 160/3, 187/4
11 ஓவர்கள் முடிந்த நிலையில் மழை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
11 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்துள்ளது. ரிஸ்வான் 1, ஜமான் 14 ரன்கள் எடுத்துள்ளனர்.
10.4 ஓவரில் பாபர் ஆசாம் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் அவர் பவுல்டு அவுட் முறையில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்துள்ளது.
7 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்துள்ளது. பாபர் ஆசாம் ரன் ஏதும் எடுக்காமலும், ஜமான் 4 ரன்கள் எடுத்தும் களத்தில் உள்ளனர்.
4.2 ஓவரில் பும்ரா பந்துவீச்சில் இமாம் உல் ஹக் 9 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்துள்ளது.
3 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 15 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணி 357 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. பாகிஸ்தான் அணி சேஸிங் செய்யத் துவங்கியது. துவக்க வீரர்களாக இமாம் உல் ஹக், பாக்கர் ஜமான் களமிறங்கினர். முதல் ஓவரை பும்ரா வீசினார்.
1 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் எடுத்துள்ளது.
50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 356 ரன்கள் குவித்துள்ளது
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 6வது சதத்தை பூர்த்தி செய்தார் ராகுல்
கேஎல் ராகுலும், கோலியும் அடுத்தடுத்து அரைசதம் எடுக்க இந்திய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது
இந்தியா, பாகிஸ்தான் போட்டி 4.40 மணிக்கு விட்ட இடத்தில் இருந்து 50 ஓவராக நடத்தப்படும்
கொழும்புவில் காலை முதல் கனமழை பெய்து வந்ததால், ஆடுகளத்தில் அதிகளவு ஈரப்பதம் இருக்கிறது. இதனால் ரிசர்வ் டே-விலும் ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ரிசர்வ் டேவான நாளை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைய ஆட்டம் இதே நிலையில் தொடரப்படும் என்றும் தெரிய வந்துள்ளது.
இரவு 9 மணிக்கு ஆட்டம் தொடங்கப்பட்டால், 34 ஓவர்கள் போட்டியாக நடத்தப்படும் என்றும் தெரிய வந்துள்ளது. ஒருவேளை இன்று ஆட்டம் தொடங்கவில்லை என்றால், நாளை 50 ஓவர் போட்டியாக தொடரப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது
இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கனமழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது
இந்தியா, பாகிஸ்தான்ஆட்டம் மழையால் தடைப்பட்டது
சுப்மன் கில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணி 19 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 5, ராகுல் 5 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
16.4 ஓவரின் போது ரோஹித் சர்மா 56 ரன்கள் எடுத்த நிலையில் ஷதாப் கான் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்தியா 1 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்துள்ளது.
16 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 118 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் 56, கில் 55 ரன்கள் எடுத்துள்ளனர்.
சுப்மன் கில் அதிரடியாக 37 பந்துகளில் அரைசதம் கடந்தார். 13 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 96 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் 44, கில் 50 ரன்கள் எடுத்துள்ளனர்.
11 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் 20, கில் 47 ரன்கள் எடுத்துள்ளனர். பாகிஸ்தான் அணி விக்கெட் எடுக்க முடியாமல் திணறி வருகிறது.
9 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் 10, கில் 41 ரன்கள் எடுத்துள்ளனர். கில் அதிரடியாக 9 ஃபோர் அடித்து 30 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்துள்ளார்.
7 ஓவர்கள் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சு தேர்வு
இந்தியா, பாகிஸ்தான் மோதும் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தின் தமிழ் அப்டேட்ஸ்க்கு உங்களை வரவேற்கிறோம்


Click it and Unblock the Notifications