Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs PAK - டாசில் ரோகித்துக்கு அடிச்ச லக்.. இந்திய அணியில் அதிரடி மாற்றம்.. EX CSK வீரருக்கு இடம்

பல்லக்கல்லே : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தற்போது பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இலங்கையில் உள்ள கண்டி மைதானத்தில் மழை மேகங்கள் சூழ்ந்து இருக்கிறது. எனினும் ஆட்டம் எவ்வித தாமதமும் இன்றி டாஸ் போடப்பட்டுள்ளது.

இதனால் திட்டமிட்டபடி போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த முக்கியமான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்வதாக அறிவித்துள்ளார்.

Asia cup 2023 - India won the toss and made massive changes against pakistan

இது தொடர்பாக பேசிய அவர் நாங்கள் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய உள்ளோம். மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. எனினும் வானிலை பற்றி எல்லாம் நாங்கள் அதிகம் யோசிக்கவில்லை. நாங்கள் இங்கு நல்ல கிரிக்கெட்டை விளையாட வந்திருக்கிறோம். என்ன சவால்கள் இருக்கிறதோ அதனை ஏற்றுக் கொள்ள இருக்கிறோம். சூழலுக்கு தகுந்தார் போல் நாங்கள் விளையாட போகிறோம்.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு எங்களுக்கு சில காலம் ஓய்வு கிடைத்தது. அந்த நேரத்தில் நாங்கள் ஆசிய கோப்பை தொடருக்காக சிறப்பான பயிற்சியை மேற்கொண்டு அனைவரும் நல்ல உடல் தகுதியுடன் இருக்கிறோம். இந்த தொடரில் நாங்கள் எந்த அளவு செயல்பட போகிறோம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நிச்சயமாக இது சவால்கள் நிறைந்த தொடர். ஏனென்றால் எதிரணிகளும் தரம் வாய்ந்த அணியாக இருப்பார்கள். ஒரு அணியாக யார் சிறப்பாக செயல்படுகிறார்களோ அவர்களே வெற்றி பெறுவார்கள். இந்திய அணியில் ஸ்ரேயாஸ், பும்ரா ஆகியோர் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள். மேலும் சர்துல் தாக்கூருக்கு அணியில் இடம் கிடைத்திருக்கிறது.

ஜடேஜா ஆகியோர் பிளேயிங் லெவனில் இருக்கிறார்கள் என்று கேப்டன் ரோகித் சர்மா கூறினார். இதனை தொடர்ந்து பேசிய கேப்டன் பாபர் அசாம் முதலில் நாங்களும் பந்து வீச தான் இருந்தோம். ஆனால் டாஸ் எங்கள் கையில் இல்லை. இது நிச்சயம் சவால்கள் நிறைந்த ஆட்டம். இந்த போட்டியில் நாங்கள் எந்த பதற்றமும் இல்லாமல் விளையாடுவோம் என பாபர் அசாம் கூறியுள்ளார்.

Story first published: Saturday, September 2, 2023, 14:53 [IST]
Other articles published on Sep 2, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+