டுப்ளின் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை அல்லது திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கான இறுதி கட்ட ஆலோசனையில் அஜித் அகார்கர் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் ஏற்கனவே ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாளை அல்லது நாளை மறுநாள் 18 பேர் கொண்ட அணி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

இதில் 15 பேர் மெயின் அணியிலும், மூன்று வீரர்கள் ரிசர்வ் வீரராக இருப்பார்கள் என்று தெரிகிறது. இதில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, கில் ஆகியோர் இடம் பெறுவார்கள் என தெரிகிறது. நடு வரிசையில் விராட் கோலி, இளம் வீரஎ திலக் வர்மா ஆகியோர் சேர்க்கப்படுவார்கள் என தெரிகிறது. காயத்திலிருந்து குணமடைந்து வரும் கே எல் ராகுல் இந்த தொடரில் இந்திய அணிக்கு திரும்புவார் என தெரிகிறது.
இதே போன்று சூரிய குமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோரும் அணியில் இடம் பெறுவார்கள். விக்கெட் கீப்பர்களாக சஞ்சு சாம்சன், இஷான் கிஷனும் சுழற் பந்துவீச்சாளர்களாக குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் ,சாகல் ஆகியோர் இடம் பெறுவார்கள் என தெரிகிறது. வேக பந்துவீச்சாளர்கள் பட்டியலில் பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம்பெற வாய்ப்பு உள்ளது.
18 வது வீரராக காயத்திலிருந்து குணமடைந்து வரும் ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது சர்துல் தக்கூர் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் நடு வரிசையில் திலக் வர்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர் யார் கீழ் வரிசையில் பேட்டிங் தெரிந்த வீரருக்கு யார் வாய்ப்பு வழங்கப்படும் என்பதெல்லாம் இந்த அணியை வைத்து தான் முடிவு எடுக்கப்படும்.இது வெறும் உத்தேச பட்டியல் தான் மெயின் அருகில் சில மாற்றங்கள் இருக்கலாம்.