Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படிதான் உங்களோட நடை இருக்கு.. விராட் கோலியை கலாய்த்து தள்ளிய இஷான் கிஷன்.. ஜாலியான இந்திய அணி!

கொழும்பு: இலங்கை அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்ற பின், மைதானத்தில் விராட் கோலி முன்பாக அவரை போலவே நடந்து காட்டி இஷான் கிஷன் கலாய்த்த வீடியோ ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆசியக் கோப்பை இறுதிப்போட்டி கொழும்பு மைதானத்தில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் சிராஜின் மிரட்டலான பந்துவீச்சால் வெறும் 50 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. முகமது சிராஜ் ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, மொத்தமாக 6 விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார்.

Asia Cup 2023: Ishan Kishan walking like Virat Kohli during the presentation ceremony video is trending

இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 6.1 ஓவர்களில் 51 என்ற எளிய இலக்கை விரட்டி 8வது முறையாக ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்றது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாகியுள்ளனர். ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய அணி வீரர்களுமே உற்சாகினர். மைதானத்திலேயே இந்திய அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது முகமது சிராஜிற்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் பரிசளிப்பு விழாவிற்கு முன்பாக ஒன்றாக நின்றிருந்த இந்திய அணி வீரர்கள் ஒருவரை ஒருவர் கலாய்த்த வீடியோ ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி எப்படி நடப்பாரோ அப்படியே நடந்து காட்டினார் இஷான் கிஷன்.

Asia Cup 2023: Ishan Kishan walking like Virat Kohli during the presentation ceremony video is trending

கால்களை கொஞ்சமாக அகற்றி நடந்து செல்லும் போது வலது பக்கம் பார்க்கும் பார்வை வரை விராட் கோலியை அப்படியே நகலெடுத்தது போல் இஷான் கிஷன் நடந்து காட்டினார். இதனை பார்த்துக் கொண்டிருந்த அனைத்து வீரர்களும் விராட் கோலியை கலாய்த்தனர். இதற்கு விராட் கோலி, நீ என்னை போல் நடக்கவில்லை என்று வேறு வகையில் நடந்து காட்டி இஷான் கிஷனை கலாய்த்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. உலகக்கோப்பை நெருங்கி வரும் சூழலில், இந்திய அணியின் சீனியர் மற்றும் ஜூனியர் வீரர்கள் அனைவரும் எந்தவித ஈகோவும் இல்லாமல் ஜாலியாக மைதானத்தில் விளையாடிய சம்பவம் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Story first published: Monday, September 18, 2023, 7:50 [IST]
Other articles published on Sep 18, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+