Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆசிய கோப்பையை வெல்லுமா பாகிஸ்தான்.. பலம் என்ன? பலவீனம் என்ன? நம்பர் 1 அணிக்கு தகுதி உடையதா பாபர் படை

லாகூர் : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியை நம்பர் ஒன் அணி என்ற அந்தஸ்துடன் பாகிஸ்தான் எதிர்கொள்ள உள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் உலகின் நம்பர் ஒன் அணி என்று சொல்ல தகுதிகள் இருக்கிறதா?

பாகிஸ்தான் உண்மையிலேயே பலம் வாய்ந்த அணி தானா? அந்த அணிக்கு பலவீனம் என்பது இல்லையா என்பதை தற்போது பார்க்கலாம். நடப்பாண்டில் நியூசிலாந்தை இரண்டு முறை பாகிஸ்தான் அணி வீழ்த்தி இருக்கிறது.

Asia cup 2023 - Lets look at Pakistan team strength and weakness

இதில் ஒரு முறை பலம் குன்றிய நியூசிலாந்து அணியை தான் பாகிஸ்தான் எதிர் கொண்டது. இதைப் போன்று ஆப்கானிஸ்தானை பாகிஸ்தான் எதிர்கொண்டது. இதில் மூன்றுக்கு பூஜ்ஜியம் என பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இதில் ஆப்கானிஸ்தான் வீரர்கள் பேட்டிங், பந்துவீச்சு என சில போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும் அவருடைய அனுபவம் இன்மை அவர்களுக்கு பெரிய மைனஸ் ஆக இருந்தது.

இதனை பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. தற்போது உலகின் முதல் நிலை அணி என்ற உத்வேகத்துடன் பாகிஸ்தான் அணி களமிறங்குகிறது. பாகிஸ்தான் அணியின் பலம் என்றால் அது பேட்டிங், பந்து வீச்சு என இரண்டிலும் இருப்பது உண்மைதான். பாகிஸ்தானில் டாப் 4 வீரர்கள் பேட்டிங்கில் பலம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். பக்கர் ஜமான், இமாம் உல் ஹக், பாபர் அசாம், முகமது ரிஸ்வான் என நான்கு வீரர்கள் பேட்டிங்கிலும், சதப்கான், ஹரிஷ் ரவுப், நசீம் ஷா, ஷாகின் அப்ரிடி என பந்து வீச்சில் நான்கு வீரர்களும் என பாகிஸ்தான் பலம் வாய்ந்த அணியாகவே விளங்குகிறது.

ஆனால் பாகிஸ்தானின் மிகப்பெரிய பலவீனமே அவர்களுடைய நடுவரிசை தான். பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் விரைவில் ஆட்டமிழந்து விட்டால் அந்த அணியின் நடு வரிசை அனுபவம் குன்றியதாக இருக்கிறது. இது அந்த அணிக்கு மிகப்பெரிய மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. மேலும் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சில் பலம் வாய்ந்ததாக தெரிந்தாலும் அவர்களும் அவ்வப்போது சில தவறுகளை செய்கிறார்கள்.

ஆடுகளத்தில் ஏதேனும் சாதகமாக சூழல் இருந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணியால் சிறப்பாக பந்து வீச முடிகிறது. இல்லையெனில் அவர்கள் தடுமாறுகிறார்கள். இந்த குறைகளை எல்லாம் வெளியே காட்டிக்காமல், அவர்கள் எப்படி சரி செய்கிறார்களோ அதை பொறுத்து பாகிஸ்தான் அணியின் வெற்றி இருக்கும். என்னதான் நம்பர் ஒன் அணியாக இருந்தாலும் ஆட்டத்திறன் வீரர்களுடைய அனுபவம் ஆகியவற்றை வைத்துப் பார்த்தால் இந்தியாவுக்கு அடுத்தது தான் பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் வாய்ப்புடன் இருக்கிறது.

Story first published: Tuesday, August 29, 2023, 17:00 [IST]
Other articles published on Aug 29, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+