ஆசிய கோப்பை 2023 LIVE: 11வது முறையாக இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று தொடங்கியுள்ளது. சூப்பர் 4 சுற்றுக்கு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகள் முன்னேறியுள்ளன. இந்த நிலையில் வாழ்வா சாவா போட்டியில் பாகிஸ்தான், இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

பாகிஸ்தானை வீழ்த்தி 11வது முறையாக இறுதிப் போட்டிக்கு இலங்கை தகுதி
இப்போது மழை குறுக்கிட்டால் இலங்கைக்கு டிஆர்எஸ் இலக்கு 96 ரன்கள் தான். தற்போது இதனை இலக்கை தாண்டி இலங்கை உள்ளது
குசேல் மெண்டிஸ் அரைசதம் - இலங்கை அணி 21 ஓவர் முடிவில் 131 ரன்களுக்கு 2 விக்கெட்
13.2 ஓவர்களில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழப்பிற்கு 77 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
இலங்கை அணி தொடக்க வீரர் குசல் பெரேரா அதிரடியாக 8 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த நிலையில், ஷடாப் கானின் அபாரமான ஃபீல்டிங்கால் ரன் அவுட்டாகி வெளியேறினார்
இலங்கை அணி 21 ரன்களுக்கு ஒரு விக்கெட் இழந்தது
இலங்கை அணி 2.2 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 16 ரன்கள் எடுத்துள்ளது
42 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 252 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பாக ஆடிய முகமது ரிஸ்வான் 73 பந்துகளில் 86 ரன்கள் விளாசி கடைசி வரை களத்தில் இருந்தார்
பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் 49 பந்துகளில் அரைசதம் விளாசி அதிரடியாக விளையாடி வருகிறார்
மழை பெய்ததால், இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 42 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
27.4 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 130 ரன்கள் சேர்த்து விளையாடி வந்த நிலையில், ஆட்டம் மழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது
பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் சஃபிக் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதனால் பாகிஸ்தான் அணி 100 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது
பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 83 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
11 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது
பாகிஸ்தான் அணி தொடக்க வீரர் ஃபக்கர் ஜமான் 4 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வு செய்தார்
இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்
டாஸ் 5 மணிக்கும், முதல் பந்து 5.15 மணிக்கும் வீசப்படும்
இலங்கை, பாகிஸ்தான் மோதும் ஆட்டம் 45 ஓவர்களாக குறைப்பு
கொழும்புவில் கனமழை பெய்து வருவதால், பாகிஸ்தான் - இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது
இலங்கை, பாகிஸ்தான் மோதும் முக்கிய ஆட்டம் மழையால் பாதிப்பு


Click it and Unblock the Notifications