கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. சூப்பர் போர் சுற்று ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டாலும் தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கிளைமாக்ஸ் நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது.
நம்பர் ஒன் அணியாக ஆசிய கோப்பை தொடரில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக 238 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது.

இந்த நிலையில் புள்ளி பட்டியலில் தற்போது பாகிஸ்தான அணி சரிவை கண்டிருக்கிறது. இதன் மூலம் அந்த அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. தற்போது புள்ளி பட்டியலில் இந்திய அணி ஒரு போட்டியில் விளையாடி 2 புள்ளிகளுடன் ரன் ரேட்டில் 4.56 என்ற இடத்தில் இருக்கிறது. இலங்கை அணி ஒரு போட்டியில் விளையாடி 2 புள்ளிகளுடன் 0.42 என்ற ரன் ரேட்டில் இருக்கிறது.
பாகிஸ்தான அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் இரண்டு புள்ளிகள் உடன் மைனஸ் 1.89 என்ற ரன் ரேட்டில் இருக்கிறது. வங்கதேசம் அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவி இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு வெல்ல வேண்டும் என்றால் அது இந்தியாவின் கையில் தான் இருக்கிறது.
இந்திய அணி இன்று இலங்கையை வீழ்த்தியே ஆக வேண்டும். இதன் மூலம் பாகிஸ்தான அணி தங்களது கடைசி ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தினால் அவர்கள் இறுதிச்சுற்றுக்கு முன்னேற முடியும். ஒரு வேளை இன்றைய ஆட்டத்தில் இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்று, பின் வங்கதேசத்தை இந்தியா வீழ்த்தினால் பாகிஸ்தான அணி சூப்பர் 4 சுற்றில் இருந்து நாக் அவுட் ஆகிவிடும்.
அதேபோன்று தங்களுடைய கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இலங்கைக்கு எதிராக தோல்வியை தழுவினாலும் அவர்கள் தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள். இதே போன்று இனி சூப்பர் போர் சுற்றில் எஞ்சிய ஆட்டங்களும் மழையால் ரத்தானால் இறுதிப்போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் நிலைமை தான் ஏற்பட்டு இருக்கிறது. போதாத குறைக்கு தற்போது பாகிஸ்தான் அணியில் இரண்டு முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் காயம் காரணமாக இல்லாததும் அந்த அணியின் வெற்றி வாய்ப்பை பாதித்திருக்கிறது.