Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்ப திட்டுங்க பார்க்கலாம்.. வசமாக சிக்கிய கத்துக்குட்டி டீம்.. புரட்டி எடுத்த இந்திய வீரர்கள்!

பல்லேகலே : 2023 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் சொதப்பிய இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் கடும் விமர்சனத்தை சந்தித்தனர்.

அதற்கு சேர்த்து வைத்து கத்துக்குட்டி அணியான நேபாள்-ஐ அடித்து துவைத்து சாதனை புரிந்துள்ளனர். ஜடேஜா பந்துவீச்சிலும், ரோஹித் சர்மா, சுப்மன் கில் பேட்டிங்கிலும் பல்வேறு சாதனைகளை செய்துள்ளனர்.

Asia cup 2023 : Rohit sharma, Jadeja make records against Nepal

இந்திய அணி நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக ஆடி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் போட்டி: முன்னதாக குரூப் பி-இல் இடம் பெற்றுள்ள இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் படு மோசமாக ஆடியது. ரோஹித் சர்மா 11, சுப்மன் கில் 10, விராட் கோலி 4 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தனர்.

கடும் விமர்சனம்: இதனால், இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் குறித்து விமர்சனம் எழுந்தது. குறிப்பாக ரோஹித் சர்மா கடந்த சில போட்டிகளாக சரியாக விளையாடவில்லை என்ற பேச்சு சமூக ஊடகங்களில் எழுந்தது. இதற்கு பதிலடி கொடுத்துள்ளார் ரோஹித் சர்மா.

சிக்கிய நேபாள்: பெரிய அணிகளுடன் அதிக போட்டிகளில் ஆடிய அனுபவம் இல்லாத நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்துவீச்சில் துவக்கத்தில் தடுமாறினாலும் அதன் பின் சுதாரித்து அந்த அணியை 230 ரன்களுக்கு சுருட்டியது.

ஜடேஜா சாதனை: இந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா 10 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இதன் மூலம், மூன்று சாதனைகளை செய்துள்ளார் ஜடேஜா. ஆசிய கோப்பை ஒருநாள் போட்டிகளில் 22 விக்கெட்களை வீழ்த்தி உள்ள ஜடேஜா, இதன் மூலம், ஆசிய கோப்பை ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை இர்பான் பதானுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும், இடது கை சுழற் பந்துவீச்சாளராக அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதல் இடத்தை ஜெயசூரியா மற்றும் அப்துர் ரசாக் உடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.

ரோஹித் சர்மா சாதனை: மறுபுறம் நேபாள் அணிக்கு எதிரான போட்டியில் 6 ஃபோர், 5 சிக்ஸ் அடித்த ரோஹித் சர்மா 74 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதன் மூலம், பல்வேறு சாதனைகளை செய்துள்ளார்.

ஆசிய கோப்பை தொடரில் 10 அரைசதம் அடித்துள்ள ரோஹித், இந்திய அளவில் ஆசிய கோப்பை தொடரில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையையும், சர்வதேச அளவில் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளார்.

மேலும், நேற்றைய போட்டியுடன் ஆசிய கோப்பை தொடர்களில் 1101 ரன்கள் குவித்துள்ள ரோஹித் சர்மா, அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். 1220 ரன்களுடன் சனத் ஜெயசூரியா முதலிடத்தில் இருக்கிறார்.

Story first published: Tuesday, September 5, 2023, 7:42 [IST]
Other articles published on Sep 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+