மும்பை : ஐபில் கிரிக்கெட் இறுதிப்போட்டி முடிவடைந்த உடனே கிரிக்கெட் சீசன் புஸ்வானம் போல் ஆகியது.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, வெஸ்ட் இண்டீஸ் தொடர், அயர்லாந்து தொடர் என போட்டிகள் நடைபெற்றாலும் அது எதுவும் ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்க்கவில்லை.
இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு மேல் காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது தொடர்ந்து நான் ஸ்டாப் கொண்டாட்டமாக கிரிக்கெட் போட்டிகள் நடக்க இருக்கிறது. அதுவும் ஆசிய கோப்பை உலகக்கோப்பை என அடுத்த மூன்று மாதங்கள் கிரிக்கெட் ரசிகர்கள் மூச்சு விடவே நேரம் இருக்காது.

அந்த வகையில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தங்களது முதல் ஆட்டத்தை வரும் செப்டம்பர் இரண்டாம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது. இந்தப் போட்டிக்கான பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்று சஞ்சய் மஞ்சரேக்கர் தேர்வு செய்துள்ளார்.அதனை தற்போது பார்க்கலாம். சஞ்சய் மஞ்சுரேக்கர் தனது டாப் 3 வீரர்களாக பிளேயிங் லெவனின் ரோகித் சர்மாவையும், கில்லையும் விராட் கோலியையும் வைத்திருக்கிறார்.
நடு வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் அல்லது திலக் வர்மா இருவரில் ஏதேனும் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் திலக் வர்மாவை சேர்ப்பது சரியாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள சஞ்சய் மஞ்சுரக்கர். இந்திய அணியில் டாப் வரிசையில் இடது கை பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லாததால் திலக் வர்மா சரியான தேர்வாக அணியில் இருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.
விக்கெட் கீப்பராக கே.எல் ராகுலை தேர்வு செய்துள்ள சஞ்சு மஞ்சரேக்கர் ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியாவையும் ஜடேஜாவையும் சேர்த்திருக்கிறார். எட்டாவது வீரராக சுழற் பந்துவீச்சாளர் குல்தீவ் யாதவையும் எஞ்சியுள்ள மூன்று இடத்திற்கு பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ் ஆகிய மூன்று வீரர்களை சஞ்சு மஞ்சுரேக்கர் தேர்வு செய்து இருக்கிறார்.இந்திய அணி ஹர்திக் பாண்டியாவை நான்காவது வேகப்பந்து வீச்சாளராக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் சஞ்சய் மஞ்சுரேக்கர் சுட்டிக்காட்டி உள்ளார்.